10 வருடங்களுக்கும் மேலாக, துறைமுகத்தில் தேங்கியுள்ள 800 க்கு மேற்பட்ட கொள்கலன்கள்
துறைமுகம், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த கொள்கலன்கள் தேங்கியுள்ளமையால், துறைமுகத்தில் பாரிய இடப்பற்றாக்குறை நிலவுவதாகவும், அந்த இடங்களில் பயனுள்ள செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் இலங்கை கடல்சார் முகவர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சில கொள்கலன்கள் 10 வருடங்களுக்கு மேலாக துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.
இந்த நிலையில், துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுங்க மற்றும் துறைமுக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுவரை பெற்றுக்கொள்ளப்பட்ட சேவைகளுக்காக 70 மில்லியன் அமெரிக்க டொலர், கப்பல் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இதன்போது தெரிவித்துள்ளார்.
Post a Comment