Header Ads



ஜனாதிபதி முன்னே பொலிஸ்மா அதிபர் மீது, பொதுஜன பெரமுன Mp க்கள் பாய்ச்சல் - தமக்கு இழப்பீடு தருமாறும் கோரல்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று சனிக்கிழமை, 14 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஸவை சந்தித்தது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவி விலகியதன்பின், இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு பின்னர் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இந்தக் கூட்டம், பல்வேறு காரணிகளினால் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்திருந்தது.

பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கவுள்ள நிலையிலும், பொதுஜன பெரமுன கூட்டத்திற்கு பொலிஸ்மா அதிபர் அழைக்கப்பட்டிருந்தமையும் இதற்கு முக்கியத்துவம் அதிகரித்திருந்தது.

கூட்டத்தின் போது பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள், தமது வீடுகள் மற்றும் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் காரசாரமான கருத்துக்களை கவலையுடன் வெளிப்படுத்தினர்.

பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பொலிஸ்மா அதிபர் தவறிவிட்டதாக அவர்கள் நேரடியாகவே குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமக்கு எதிராக இழைக்க்பட்ட வன்முறைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளையும் ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டுமென வாதிட்டுள்ளனர்.

1 comment:

  1. The violance did not happen after PM's resighnation, but it followed by thugs barbarians attacks. so, don't link it with his resignation???

    ReplyDelete

Powered by Blogger.