Header Ads



ஆட்சியாளர்கள் அனைவருக்கும் சாபம் உண்டாகட்டும், குழந்தை இறந்ததே நல்லது - Dr. Shanaka வின் சோகமான பதிவு


Dr.Shanaka Roshan Pathirana வின் Facebook பதிவு

இது தியதலாவ மருத்துவமனையில் எனது 86 தாவது மரண பரிசோதனையும் மிக வேதனைக்குரிய மரணமுமாகும்.

பிறந்து இரண்டே நாட்களான இந்தச்சிசுவை தாய்ப்பால் பருகாமல், மஞ்சள் நிறமாகி இரத்தத்தில் சக்கரை அளவு குறைந்ததால் ஹல்தும்முல்ல வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்காக தந்தை பெற்றோல் தேடி ஒரு மணி நேரம் அலைந்து திரிந்து  கொண்டுவரப்பட்டபோது குழந்தையின் இரத்தத்தில் சக்கரை அளவு 22mg/dl.

அங்கிருந்து தியதலாவ மருத்துவமனைக்கு கொண்டுவரும்போதே குழந்தை மூச்சுத் திணறியபடி இருந்திருக்கிறது. தியதலாவ வைத்தியசாலை ETU வில் அனுமதிக்கப்பட்டு அங்கே குழந்தை இறந்து விட்டது.

அந்த ஒரு மணி நேரம் பிந்தியிருக்காவிட்டால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம். 

தங்களுக்கு எதுவும் நேரும்வரை அடுத்தவர் துன்பம் நமக்கு புரியாது. ஒன்பது மாதங்கள் வயிற்றில் சுமந்து இரண்டு நாட்கள் கையில் கொஞ்சிய பிஞ்சுக் குழந்தை ஒரு லீற்றர் பெற்றோல் இல்லாததால் இறந்து போனது என்கிற துக்கம் அந்தப் பெற்றோருக்கு  வாழ்க்கை முழுவதும் வதைக்கப் போகிறது.

இறந்த பிஞ்சு உடலை வெட்டுவதற்கே துயரம். அங்க அவயவங்கள் எல்லாம் எந்தக் குறையுமற்று பிறந்திருந்த குழந்தை. 

இந்த ஆட்சியாளர்கள் அனைவருக்கும் சாபம் உண்டாகட்டும்.

பின்னர் இந்த சாபக்கேடான நாட்டில் கேடுகெட்ட ஆட்சியாளர்கள் உள்ள நாட்டில் வாழ்வதை விட அந்தக் குழந்தை இறந்ததே நல்லதென்று தோன்றியது.

2

 இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பிறந்தே இரண்டே நாளான பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




No comments

Powered by Blogger.