Header Ads



நீண்ட காலத்திற்கு பிறகு, பொது நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி


13வது தேசிய படைவீரர் நினைவு தினம் கொண்டாடப்பட்டது. 30 ஆண்டுகளுக்கும் மேலான கொடூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தாய்நாட்டில் அமைதியை ஏற்படுத்திய தாய்நாட்டின் மீதான வெற்றியை கொண்டாடும் வகையிலும், யுத்தத்தினால் உயிர்நீத்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் மகத்தான சேவையை நினைவூட்டும் வகையிலும் தேசிய படைவீரர்கள் தினம் முப்படைகளின் தளபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்ல தேசிய படைவீரர் நினைவு தூபிக்கு முன்பாக இன்று (19) நடைபெற்றது. 

பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்த பின்னரும், பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி பொது நிகழ்வில் பங்கேற்பதை தவிர்த்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.