Header Ads



மஹிந்த வெளியேறிய பின் முதற்தடவையாக ஜனாதிபதியை சந்திக்கும் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற குழு


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் தமது பதவிகளை விட்டு வெளியேறி சில நாட்களாகிவிட்டன. முன்னாள் பிரதமர் மற்றும் பல அமைச்சர்களின் வீடுகளும் தீ இட்டு கொளுத்தப்பட்டுள்ளன.

தற்போது புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டு  புதிய அமைச்சரவையை நியமிப்பதற்காக ஆயத்தங்களும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதியை நாளை சனிக்கிழமை 14 ஆம் திகதி சந்திக்க உள்ளது. மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து வெளியேறிய பின் இச்சந்திப்பு இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும். 

இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணிலுக்கு ஆதரவளிப்பது மற்றும் தமது வீடுகள் சொத்துக்கள் தாக்கப்பட்டமை குறித்து முக்கியமாக ஆராயப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.