Header Ads



ஹக்கீம், ஹரீஸ், தௌபீக் கொழும்பில் சந்தித்து பேச்சு


- Anzir -

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினாகளான ஹரீஸ் மற்றும் தௌபீக் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை, 13 ஆம் திகதி சந்திப்பொன்றில் பங்கேற்றுள்ளனர்.

கொழும்பில் நடைபெற்ற இச்சந்திப்பில், சமகால அரசயில் நிலவரங்கள் தொடர்பில் இவர்கள் மூவரும் கலந்துரையடி உள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டு மக்களின் எதிர்ப்பு, பிரதமரான ரணில் பதவியேற்ற விவகாரம், ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு உள்ளிட்ட, பல விடயங்கள் பற்றி தமக்கிடையே பேசியுள்ளனர்.

பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கும், அந்த அரசாங்கம் கொண்டுவந்த அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு கட்சியின் தீர்மானத்தை மீறி வாக்களித்தமைக்காக, அவர்களுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, முஸ்லிம் காங்கிரஸில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தமும் செய்யப்பட்டிருந்தனர்.

 கட்சியில் இருந்து சற்று தள்ளிவைக்கப்பட்டிருந்த ஹரீஸும், தௌபீக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை  சந்தித்துப் பேசியமை, தறபோது  நாட்டின் அரசியல் களநிலவரம், மாற்றமடைந்துள்ள நிலையில் முக்கிய விடயமாக நோக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.