Header Ads



மகிந்தவை மாலைதீவுக்கு அழைத்துச்செல்ல திட்டமா..? முற்றாக மறுக்கிறார் நாமல்


மகிந்த ராஜபக்சவை மாலைதீவிற்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் நோக்கத்துடனேயே அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என மோல்டீவ்ஸ் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் சிக்குப்பட்ட நிலையில் காணப்படும் மகிந்தராஜபக்சவையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பாக மாலைதீவிற்கு அழைத்துசெல்வதற்கான முயற்சிகளில் முகமட் நசீட் ஈடுபட்டுள்ளார் என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

நசீட் தற்போது இலங்கையில் பல அரசியல் தலைவர்களை சந்தித்து வருகின்றார்-என தெரிவித்துள்ள மோல்டீவ்ஸ் ஜேர்னல் சர்வதேச நிவாரணங்களை ஒருங்கிணைக்கும் விடயத்தில் அனுபவம் இல்லாத போதிலும் அதற்காக அவர் இலங்கை சென்றுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் மகிந்த ராஜபக்ச பாதுகாப்பாக மாலைதீவிற்கு செல்வதற்கு ஏற்பாடு செய்வதாக பரப்புரை செய்துள்ளார் என மோல்டீவ்ஸ் ஜேர்னல் தெரிவித்துள்ளார்.

மகிந்த உதவி கோரினார்.

தனது பதவியை இராஜினாமா செய்த பின்னர் மகிந்த நசீட்டின் உதவியை நாடினார் தொலைபேசி அழைப்பில்  இலங்கையில் பதற்றநிலை தணியும்வரை மாலைதீவில் தானும் குடும்பத்தினரும் தங்கியிருப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டார் என  அரசாங்க அதிகாரியொருவர் மோல்டீவ்;ஸ் ஜேர்னலிற்கு தெரிவித்துள்ளார்

மாலைதீவு முதலில் மாலைதீவின் சுற்றுலாத்துறை பெரும்கோடீஸ்வரர் சம்பா முகமட் மூசா என்பவரின் இடத்தில் மகிந்த ராஜபக்சவை தங்கவைக்க திட்டமிட்டது இருவருக்கும் நல்ல நெருக்கம் உள்ளது எனினும் மூசா நம்பமுடியாதவர் என்பதால் நசீட் அதனை நிராகரித்துள்ளார் என மோல்டீவ் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது

மூசா நம்பமுடியாதவர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின்சோனு சிவ்டசானி என்பவருக்கு சொந்தமான சொனேவா பியுசி என்ற இடத்தில் மகிந்த ராஜபக்ச சொந்த வீட்டை வாங்கமுடியும் என்ற யோசனையை நசீட் முன்வைத்துள்ளார்.

சோனு சிவ்டசானி இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்,12மில்லியன் டொலருக்கு மகிந்த ராஜபக்சவிற்கு தனதுதனிப்பட்ட மாளிகையை விற்க அவர் சம்மதித்துள்ளார்,மேலும் இன்னுமொரு மாளிகையையும்  3 மில்லியன் டொலருக்கு விற்க தீர்மானித்துள்ளார் அதனை மகிந்தராஜபக்சவின்  குடும்ப பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயன்படுத்தவுள்ளனர் என மோல்டீவ்ஸ் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச குடும்பம் ஆறு அறைகள் கொண்ட மாளிகையை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது - 24000 சதுர அடி-இங்கு 18 பேர் தங்கலாம், இதுதவிர சகல ஆடம்பர வசதிகளும் உள்ளன என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச உதவி ஒத்துழைப்பிற்கு பின்னால் உள்ள உள்நோக்கங்கள்

சபாநாயகர் நசீட் கடந்த வாரம் இலங்கை பயணமானார்,இலங்கை வெளிநாடுகளில் இருந்து சர்வதேச உதவியை பெற்றுக்கொள்வதற்கு உதவுவதற்கு அவர் முன்வந்தார் என இலங்கையின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.விக்கிரமசிங்க அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்,நசீட் அதன் பின்னர் நாமல் ராஜபக்ச உட்பட பல முக்கிய தலைவர்களை சந்தித்துள்ளார்,எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவையும் அவர் சந்தித்துள்ளார்.

சர்வதேச உதவியை ஒருங்கிணைப்பதே அவரது ஆரம்ப உறுதிமொழியாக காணப்பட்டாலும்,மகிந்தவை மாலைதீவிற்கு கொண்டுசெல்வது குறித்த அவரது பரப்புரை காரணமாக சர்வதேச உதவி ஒருங்கிணைப்பு பின்தள்ளப்பட்டுள்ளது.

ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இலங்கையிலிருந்து வெளியேற அனுமதிக்கவேண்டும் என நசீட் தொடர்ந்தும் பரப்புரை செய்துவருகின்றார்.

சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பின்போது அவர் அமைதியையும் அரசியல் ஸ்திரதன்மையையும் ஏற்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்தார்,இந்த சந்திப்புகளில் அவர் பழிவாங்குவதை தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கை நீதிமன்றம் ராஜபக்சவின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்துள்ள அவருக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை காணப்படுகின்றது  .

ராஜபக்ச பாதுகாப்பாக வெளியேறுவதற்காக பல்வேறு தரப்பட்டவர்களை ஒருங்கிணைப்பதே இலங்கையில் நசீட்டின் பணி என மாலைதீவு அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன,இதற்கு பதில் நசீட்டின் அரசியல் நடவடிக்கைகளிற்கு நிதி உதவவுவதற்கு மகிந்த இணங்கியுள்ளார் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments

Powered by Blogger.