முடிவு எடு, நீ எடுத்தால் நான் உன்னுடன் இருப்பேன், உன்னால் முடியாவிட்டால் நான் மக்களுக்காக நிற்பேன்!
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினராக யெற்பட தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று புதன்கிழமை அதிரடியாக அறிவிப்புச் செய்திருந்தார்.
அவருடன் இன்னும் 10 அல்லது 25 பேர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகலாம் எனவும் தகவ்கள் வெளியான நிலையில் ஹரின் பெர்னாண்டோ தனது பேஸ்புக் மூலம் சிறிய ஆனால் காரசாரமான பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
Take a decision, if you take I will stay with u , if u can’t I will stand by people ! ( முடிவு எடு, நீ எடுத்தால் நான் உன்னுடன் இருப்பேன், உன்னால் முடியாவிட்டால் நான் மக்களுக்காக நிற்பேன்!) என்பதாகும்.
ரணில் ஹரீன் உறவு வலுவாக உள்ள நிலையிலும், ரணில் பிரதமராக வரவுள்ளதாகவும் நம்படுகிறது. அவ்வாறான நிலையில் இடைக்கால அரசாங்கத்தை சஜித் பொறுப்பேற்காவிட்டால் ஹரின் ரணிலுக்கு ஆதரவளிப்பது உறுதியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment