Header Ads

புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் தொடர்பில், வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்


பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடக தப்பி ஓட முயற்சித்து பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இழுத்து செல்லப்படும் படத்தில் இருக்கும் நபரை  தெரியுமா ? 

இன்று திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களால்  வர்த்தக வாணிப அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் நளின் பெர்னாண்டோ என அழைக்கப்படும் இவர் 

2014 ஆம் ஆண்டு சதொச  நிறுவனத்தின் தலைவராக இருந்த காலத்தில்  Carrom மற்றும்  Checker-boards வாங்குவதற்காக  39 மில்லியன் அரச பணத்தை மோசடி செய்தார் என்கிற புகாரின் பேரில்  2018 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இருந்தார் 

உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு டிரான் அல்லஸ் அவர்கள் Reconstruction and Development Agency (RADA) நிறுவனத்தின் தலைவராக இருந்த போது 125 மில்லியன் ரூபா அரச பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இருந்தார் 

குறிப்பாக திறைசேரியிடம் இருந்து சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டுவதற்காக 645 மில்லியன் ரூபா பணத்தை பெற்று கொண்ட இவர் பாதிக்கப்பட்ட எவருக்கும் ஒரு வீட்டை கூட கட்டி கொடுக்கவில்லை 

இன்று சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு ஹெகலிய ரம்புக்கல அவர்கள் அரச அச்சக கூட்டுத்தாபானத்தின்  230,000 ரூபா பணத்தை பயன்படுத்தி தனது தனிப்பட்ட தொலைபேசி கட்டணத்தை செலுத்திய மோசடி குற்றசாட்டை எதிர்கொண்டு இருந்தார் 

இது தவிர, ஊடகத்துறை அமைச்சராக இருந்த பொது ரூபவாஹினி நிறுவனத்தின் 990,000 ரூபா பணத்தை பயன்படுத்தி  600 GI pipes ஐ மோசடியாக வாங்கிய வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டு இருந்தது 

இது போதாதென்று  தனிப்பட்ட வீட்டுக்குரிய மின்சரான கட்டணமான 12 மில்லியனுக்கும் (12,056,803 ரூபா) அதிகமான  பணத்தை இதுவரை திரு ஹெகலிய ரம்புக்கல அவர்கள் செலுத்தவில்லை 

நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு விஜேதாச ராஜபக்ஷ அவர்கள்  அவன்ட் கார்ட் கடல்சார் சேவை நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்திய வழக்கில் கோட்டாபய ராஜபக்சே அவர்களை சட்டமா அதிபர் திணைக்களம் கைது செய்ய முயன்ற பொது அமைச்சர் என்கிற அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தி இருந்தார்  

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் சுகாதார அமைச்சராக இருந்த போது அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மற்றும் காலாவதியான மருந்து விநியோகம் தொடர்பான மோசடிகளுடன் தொடரப்பட்டு இருந்தார் 

குறிப்பாக 2007 ஆம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் படி தரமற்ற மருந்துகளின் இறக்குமதி காரணமாக சுகாதார அமைச்சுக்கு 0.5 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய சம்பவத்துடன்  திரு நிமல் சிறிபால டி சில்வா தொடர்பு பட்டு இருந்தார் 

கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு சுசில் பிரேமஜயந்த அவர்களின் மனைவி மாணவர்களை பாடசாலைக்கு சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற்ற குற்றசாட்டுகளை கடந்த காலங்களில் எதிர்கொண்டு இருந்தார் 

நகர மற்றும் வீடமைப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு பிரசன்னா ரணதுங்க அவர்கள் மீது வர்த்தகர் ஒருவருக்கு Meethotamulla பகுதியில் காணி ஒன்றின் உரிமையை மீள பெற்று கொடுக்க 64 மில்லியன் ரூபா லஞ்சம்  பலவந்தமாக பெற்று கொண்ட குற்றசாட்டு ஒன்று வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கின்றது 

 மின்சக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு  காஞ்சனா விஜேசேகர அவர்கள்  மதுபோதையில்  இரவு விடுதி ஒன்றில் தகராறில் ஈடுபட்ட குற்றசாட்டு ஒன்றும் நிலுவையில் இருக்கின்றது.

(வட்சப்பில் வந்தது)


1 comment:

  1. Rajapaksa thieves, robbers, mafia gangs, and thugs are trying to cover up their crimes with the help of Ranil Nariya and escape punishment.

    The scoundrels who plundered public money, wealth, and reserves and destroyed our country must be eradicated as a good lesson.

    All the demons must be cast out.

    ReplyDelete

Powered by Blogger.