Header Ads



சஜித் தலைமையில் சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவ தொடர் முயற்சி - சட்டத்தரணிகள் சங்கம் களத்தில் குதிப்பு


- அன்ஸிர் -

நாட்டில் பொருளாதார நெருக்கடியும், வறுமையும், விலை உயர்வும் கிடுகிடு என அதிகரித்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு பெரும் சவால்கள் காத்திருக்கின்றன.

புதிய அரசாங்கத்தின் பிரதமராக, ரணில் விக்கிரமசிங்கவும் அறிவுப்புச் செய்யப்பட்டு விட்டார்.

எனினும் 73 வயதான ரணில் விக்கிரமசங்க பிரதமராக  நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புகளும், விமர்சனங்களும் வலுவடைந்த வருகிறது.

இவ்வாறான நிலையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்க ஏற்பாட்டில், பிரதமராக சஜித் பிரேமதாசாவை நியமிக்கவும், சர்வகட்சி அரசாங்கமொன்றை குறிகிய காலத்துக்கு அமைக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கம் ஏற்கனவே ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, சஜித் பிரேமதாஸா ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். 

இதன் தொடர்ச்சியாக மைத்திரிபால, விமல் வீரவன்ச, மற்றும் சுயாதீன கட்சிகளுடன் பேச்சுக்களில் ஈடுபடவும் தீர்மானித்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவும், கோத்தபய ராஜபக்ஸவும் இணைந்து புதிய அமைச்சரவையை நியமித்த பின்னர், பாராளுமன்றத்தில் பிரதமர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவந்து ரணிலை பிரதமர் பதவியில் இருந்து அகற்றவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற 2 வேறுபட்ட அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளிலும் இவ்விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.