Header Ads



கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதி யானைக்கு தாவுகிறார் - அம்பாறை அமைப்பாளர் பதவியுடன் பிரதியமைச்சராகிறார்..?


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர், இணக்கம் வெளியிட்டுள்ளார்.

இதற்காக அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும், அவரது பிரதிநிதிகளுடனும் 3 சுற்று பேச்சுவார்த்தைகளையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்.

தமது மாவட்டத்தின் தேவைகள், பாதுகாப்பு, மக்களின் கோரிக்கைகள் பற்றியும் ரணில் தரப்பிடம் விளக்கியுள்ளார். அவருக்கு சாதகமான பதில் கிடைத்தை அடுத்து, மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் பதவியையும், பிரதியமைச்சுப் பதவியும் கேட்டுள்ளார்.

அதற்கும் ரணில் தரப்பு இணங்கியுள்ளது. இதையடுத்து அந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ரணிலுக்கு ஆதரவளிப்பதும், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதும் தற்போதுவரை உறுதியாகியுள்ளது.

முன்னர் இவர் ராஜாங்க அமைச்சு பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது என்பதுடன், செலவுகளை மட்டுப்படுத்துவதற்காக புதிய அமைச்சரவையில் ராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்படாது என்பதுடன், பிரதியமைச்சுப் பதவியே வழங்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளளன.

No comments

Powered by Blogger.