Header Ads



செம்மஞ்சள் நிறமாக மாறிய ஈராக் வானம் - நடந்தது என்ன...?


ஈராக்கின் பெரும்பகுதியை பாரிய புழுதிப் புயல் தாக்கிய நிலையில் செம்மஞ்சள் தூசி காரணமாக வானம் செம்மஞ்சள் நிறமாக மாறியுள்ளது.

இதனால் தலைநகர் பக்தாத் மற்றும் நஜாபில் விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலை இன்று செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கும் என்று காலநிலை அறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றம் மற்றும் நிலம் மற்றும் நீர் தொடர்பிலான தவறான முகாமைத்துவம் காரணமாக மத்திய கிழக்கில் புழுதிப் புயல் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் குறைகூறுகின்றனர்.

கடந்த சனிக்கிழமை ஈராக்கில் சில பகுதிகளில் 500 மீற்றருக்கு குறைவான தூரத்தையே பார்க்க முடியுமாக இருந்துள்ளது.

ஈராக்கில் கடந்த மாதமும் மோசமான புழுதிப் புயல் தாக்கியதோடு சுவாசப் பிரச்சினையால் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி ஏற்பட்டது.

வரட்சி, பாலைவனமாதல் மற்றும் மழை வீழ்ச்சி குறைவு காரணமாக ஈராக்கில் அதிக அதிகமாக புழுதிப் புயல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஈராக்கிய வானிலை ஆய்வு மையம் முன்னதாக குறிப்பிட்டிருந்தது.

No comments

Powered by Blogger.