Header Ads



வாழைப் பழங்களின் விலை சரிந்து விழுந்தது (வீடியோ)




-பாறுக் ஷிஹான்-

கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழைப்பழங்களின் விலை சடுதியாக   குறைவடைந்துள்ளது.

குறிப்பாக சம்மாந்துறை கல்முனை அக்கரைப்பற்று பொத்துவில் உள்ளிட்ட பகுதிகளில் கதலி வாழைப்பழம் கிலோ 150 ரூபாய் ,ஆணை வாழைப்பழம் 120 ரூபாய், செவ்வாழை பழம் 350 ரூபாய் ,சீனி கதலி 120 ரூபாய் , கப்பல் அல்லது கோழி சூடன் வாழைப்பழம் 280 ரூபாய், மொந்தன் வாழைப்பழம் 140 ரூபாய்  ,இதரை வாழைப்பழம் 130 ரூபாய்,  உள்ளிட்ட வாழை பழ வகைகள் பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தற்போது ஆலய உற்சவம் நடைபெற்ற காலத்தில் 100 ரூபாயை எட்டிய கதலி வாழைப்பழம் தற்போது   150 ரூபாய் முதல் ரூபாய் 200 வரையில் விற்பனை செய்யப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் கதலி உள்ளிட்ட வாழைப்பழங்களுக்கான கேள்வி அதிகரித்து இருக்கின்ற நிலையில் சந்தைக்கு அதிகளவு கதலி உள்ளிட்ட வாழைப்பழங்கள் கொண்டு வரப்படுவதால் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது. 

இதேவேளை இவ்வாறான திடீர் சரிவை தொடர்ந்து சில வியாபாரிகள் பிஞ்சு வாழைக்குலைகளை மருந்தடித்து விற்பனை செய்யும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.