Header Ads



இம்மாதத்தில் மாத்திரம் குடும்பம் ஒன்றின் வாழ்க்கைச் செலவு 5,672 ரூபாவால் அதிகரிப்பு


கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதம் சாதாரண குடும்பம் ஒன்றின் வாழ்க்கை செலவு 5,672 ரூபாவால்  அதிகரித்துள்ளது.

இலங்கை குடிசன மற்றும் புள்ளவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதற்கமைய உணவுக்கான செலவு 3,345 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

அரசிக்கான செலவு மாத்திரம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதம் 989 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

இதுதவிர பால்மாவுக்கான செலவு 369 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதேவேளை, உணவல்லா பொருட்களுக்கான செலவு 2,327 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதன்படி, மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதம் போக்குவரத்துக்கான செலவு மாத்திரம் 932 ரூபாவினால் அதிகரித்துள்ளமை இலங்கை குடிசன மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.