Header Ads



மாதவிடாய் காலத்தில் 3 நாட்கள் விடுமுறை - ஸ்பெயினில் நடைமுறைக்கு வருகிறது


 ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான,  ஸ்பெயின் தமது நாட்டு பெண்கள், தங்கள் மாதவிடாய் நாட்களில் 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கவுள்ளது

எதிர்வரும் செவ்வாய்கிழமை, 17 ஆம் திகதி நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்பெயின் நாட்டு பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் பேட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், பாடசாலைகளில் தேவைப்படும் பெண்களுக்கு சானிட்டரி பேடுகள் வழங்க வேண்டும் என்று அறிவிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டு பெண்களின் கோரிக்கையான சானிட்டரி பேட்கள் மற்றும் டம்பன்களின் விற்பனை விலையில் இருந்து, வட் வரியை நீக்க வேண்டும் என்ற விடயமும் அமுலுக்கு வரவுள்ளது.

ஸ்பெயின் பல்வேறு புவியியல் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட 17 தன்னாட்சிப் பகுதிகளை உள்ளடக்கியது. ஐரோப்பிய பணக்காரர்கள் பலர் தமது வீடுகளை இங்கு கொண்டுள்ளனர். 

47.35 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஸ்பெயின் உதைப்பந்தட்டத்திற்கும், உலக தரம்வாய்ந்த உதைப்பந்தாட்ட கழகங்களுக்கும் புகழ் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.