Header Ads



ராஜபக்ஸவினரை காப்பாற்றி, சஜித்தை பழிவாங்கவா ரணில் பிரதமரானார்..? 17 ஆம் திகதி காத்திருக்கும் சவால்


ரணிலை STATESMAN என்கிறார்கள். 
KING OF DIPLOMACY  என்கிறார்கள் ,

இவற்றையும் இவை போன்று ரணிலை அலங்கரிக்கும் அனைத்து புகழ் போர்வைப் பதங்களையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் .

He is one of the most senior politician among the current parliamentarians என்பதை யாரும் மறுக்க முடியாது.

இவ்வளவு திறமைகள் ஆற்றல் + அனுபவம் வாய்ந்த ராஜதந்திரியான அவர் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாட்டின் அரசியல் ஸ்தீரணத்தன்மையை பாதுகாக்க முன்வந்துள்ளதை வரவேற்கிறேன் , ஆனால் அதற்காக அவர் தெரிவு செய்த 

" பின்கதவால் நுழைதல் " என்கிற பிழையான அனுகுமுறையை கடுமையாக விமர்சித்தேயாக வேண்டும்.

An statesman  , A senior Seasoned politician ஏன் அனைத்து கட்சி தலைவர்களுடனும் ஒரு வட்டமேசையில் , நமது தாய் நாட்டின் இன்றைய இறுக்கமான அரசியல் கள நிலவரம் பற்றி பேசி , அலசி , விவாதித்து ஒன்றுபட்டு தீர்வுகாண முயற்சித்திருக்கக்கூடாது.

அப்படி கலந்து பேசி ஒரு சுமுகமான முடிவிற்கு வர முடியாது போகும் பட்சத்தில் ரணில் 

" சரி நான் சவாலை ஏற்கிறேன் " என்று பதவியேற்றிருப்பாராயின் நிச்சயமாக அவர் கௌரவிக்கப்பட்டிருப்பார்.

இன்று பதவியேற்றபின் பின்

 " 50 உறுப்பினர்களை பொக்கட்டில் வைத்துக்கொண்டு பொம்மலாட்டம் செய்பவர் நானல்ல" என்கிற நையாண்டித்தனமான நக்கல் பேச்சின் மூலம் சஜித்தை கேலி செய்தது ரணிலுக்குள் எரிகிற பழிவாங்கும் மனோபாவத்தை தெளிவாக காட்டிற்று. 

ஆகவே இந்த பதவியேற்பு ராஜபக்ஷாக்களை காப்பதாக மட்டுமல்லாது சஜிதை பழிவாங்குவதற்குமானது என்று தெளிவாகத் தெரிகிறது.

பொஹட்டுவை அணியையும் கைதூக்கிகள் குழுவையும் நம்பி , பிரதமர் பதவியை பொறுப்பேற்றுள்ள அவர் உடனடியாக கேபினட் ஒன்றை அமைக்காது சில நாட்களுக்கதனை தள்ளிவைத்து உறுப்பினர்களை விலைக்கு வாங்கப் போகிறார்.

நாடும் , இன்றதனை வழிப்படுத்த களமாடும் இளைஞர்களும்  எதிர்பார்க்கிற நேர்மையான தூய அரசியலை செய்யாது அந்த அழுகி புழு ஊர்கிற பழைய அரசியலை செய்யவே ரணில் முயல்வது நம் தாய் நாட்டிற்கு செய்கிற மன்னிப்பிற்கு அருகதையற்ற அடாவடித்தனமாகும்.

17ம் திகதி பாராளுமன்றம் ரணில் " மொட்டு அணியின் " தலைவரா அல்லது அரசியல் நேர்மையை விரும்பும் இளைய தலைமுறையின் தலைவரா என்பதை தோலுரிக்கும்.  

முடியுமானால் " பொஹட்டுவை " உறுப்பினர்களின் ஆதரவு இன்றி ரணில் வென்று காட்டட்டும்.

Rauf Hazeer



No comments

Powered by Blogger.