Header Ads



24 மணித்தியாலத்தில் சர்வதேச ஆதரவை பெற்ற ரணில், 113 ஐ நிரூபிக்க சந்தர்ப்பம் இல்லாமையால் பிரதமர் பதவியை இழக்கலாம்


- Anzir -

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை 13 ஆம் திகதி பல்வேறு நாடுகளின் தூதுவர்களையும் சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

தமது நாட்டின் ஆதரவை பெற்றுத் தருவதாக இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அந்நாட்டுத் தூதுவர்கள் உறுதியளித்துள்ளனர்.

ஒரு மேலே சென்று ஒருநாட்டுத் தூதுவர் உடடின நிதியுதவி குறித்த அறிவிப்பையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவ்வாறு சர்வதேசத்தின் ஆதரவை பிரதமர் ரணில் பதவியேற்ற 24 மணித்தியாலங்களுக்குள் பெற்றுக் கொண்டாலும் மறுபக்கம் 

 பாராளுமன்றத்தில் அவரினால் 113 என்ற பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவி இழக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

ரணிலின் அரசுக்கு ஆதரவில்லையென ஐக்கிய மக்கள் சக்தி ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி. விமல் அணி முன்னைய அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் என பலர் பகிரங்கமாகவே அறிவித்து விட்டனர்.

இதனால் ரணில் விக்கிரமசிங்க தமது பிரதமர் பதவியை இழப்பார் என்ற நம்பப்படுகிறது. எனினும் சிறுபான்மை கட்சிகளை வளைத்துப் பிடிக்கவும் அவர்களின் ஆதரவைப் பெறவும் ரணில் விக்கிரமசிங்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.