Header Ads



காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தின் முன் வைக்கப்பட்டிருந்த பதாதைகள் வீசியெறியப்பட்டன


இலங்கையில் கடந்த காலங்களில் அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் உள்ளாகி கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு  நீதி கோரி காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தின் முன் வைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர்களின் புகைப்படங்களை தாங்கிய பதாதைகள் வீசியெறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவில் உடையில் பொதுமக்கள் குழுவொன்று  ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் இதனை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரங்களாக தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச  மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை  பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள் மற்றும் பலர் தொடர்ச்சியாக இன்றும் 19ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


 Courtesy: Photos by Rekha Nilukshi Herath



2 comments:

  1. Like protesters, there are also people who support the present government. They would have felt angry about these protests and would have rallied in small grpoups to remove and throw the placards and banners away. I do not see anything wrong in that. That is democracy, after all.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart and Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. எதிர்ப்பாளர்களைப் போலவே, தற்போதைய அரசாங்கத்தை ஆதரிப்பவர்களும் உள்ளனர். இந்த எதிர்ப்புக்கள் குறித்து அவர்கள் கோபமடைந்திருப்பார்கள், பதாகைகள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்கும் தூக்கி எறிவதற்கும் சிறிய குழுக்களாக அணிதிரண்டிருப்பார்கள். அதில் நான் எந்தத் தவறும் காணவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அதுதான் ஜனநாயகம்.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart and Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.