Header Ads



பசிலின் செருப்பு சூப்பை குடித்த டீல்காரர்கள் எங்களை குற்றம் சாட்டுகிறார்கள் - எதிர்க்கட்சித் தலைவர்


மக்கள் ஆணையின் ஊடாகவே நாட்டின் பொறுப்பை ஏற்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மாவனல்லையில் இன்று ஆரம்பமான எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய நிலைமைக்கு உடனடித் தீர்வைக் கோரி கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி  ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் எதிர்ப்புப் பேரணி இன்று கலிகமுவவை வந்தடைந்தது.

இரண்டாவது நாளான இன்று காலை மாவனல்லையில் இருந்து இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பமானது.

பெசிலின் செருப்பு சூப்பை குடித்த டீல்காரர்கள் எங்களை குற்றம் சாட்டுகிறார்கள்.

69 இலட்சம் வாக்குகளைக் கொண்ட ஒரு ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தில் 145 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சகிதம் அதிகாரங்கள் மற்றும் 2/3 பெரும்பான்மையை கொடுத்து உருவாக்கிய அரசாங்கம், நாடு வீழ்ந்துள்ள நேரத்தில் அந்த மோசடியாளர்களுடன் எமக்கு எந்த ஒப்பந்தமும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.