Header Ads



சத்தமில்லாமல் தங்கள் சேமிப்புகளை வாரி வழங்குபவர்களில் இந்த குடும்பம் தனித்த அடையாளமாக விளங்குகிறது


ரமலான் மாதத்தின் நன்மைகளை அள்ளி குவிப்பதற்கு சத்தமில்லாமல் தங்கள் சேமிப்புகளை வாரி வழங்குபவர்களில் இந்த குடும்பம் தனித்த அடையாளமாக விளங்குகிறது..

உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நட்சத்திர விடுதிகளில், பூங்காக்களில் "காஸ்ட்லி இஃப்தார்" வழங்கும் பிரபலங்களுக்கு மத்தியில் அஜ்மானில் வசிக்கும் பாலக்காடு சேர்ந்த பாசில் முஸ்தபா குடும்பத்தின் ரமலான் சேவைகள் வித்தியாசமானது..

அரபுலகில் "ஆடு ஜீவிதம்" என்றழைக்கப்படும் பாலைவனத்தில் உட்பிரதேசங்களில் ஆடு ஒட்டகம் மேய்த்து கொட்டகையில் வசிக்கும் மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை ரமலான் முழுவதும் செய்து வருகின்றனர் பாசில் முஸ்தபா குடும்பம்..

தனது மனைவி ஸஜீனா தயாரிக்கும் உணவுகளை ஃபறாஹ், ஃபறாஸ் என்ற இரண்டு குழந்தைகள் உதவியுடன் பொட்டலம் ஆக்கி தினமும் துபாய் அபுதாபி எல்லைப்புற பாலைவனத்தில் 150 கி.மீ பயணம் செய்து நகர வாடையை நுகராத மக்களுடன் இஃப்தார் நோன்பு துறக்கும் குடும்பம், அவர்களுக்கு அத்தாளம் ஸஹர் உணவும் விநியோகம் செய்து திரும்புகின்றனர்..

கூடவே, அஜ்மான் லேபர் கேம்ப்களில் வசிக்கும் தொழிலாளர்கள் 200 பேருக்கு ஸஹர் உணவும் வழங்கி வருகின்றனர்..

அஜ்மானில் சிறியதாக தொழில் நிறுவனம் நடத்தி வரும் பாசில் முஸ்தபா தனது ஆண்டு லாபத்தின் ஒரு விகிதத்தை கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்த நற்பணிகளுக்கு ஒதுக்குவதாகவும், தனது பிள்ளைகள் கரங்களால் இந்த உதவிகளை வழங்குவதன் மூலம் சிறுவயதிலேயே அவர்களுக்கும் பிறருக்கு உதவி செய்யும் ஈகை குணம் வளர் உதவும் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் பாசில் முஸ்தபா...

 Azheem

No comments

Powered by Blogger.