Header Ads



 ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 1)


01.     ரமழான் மாத நோன்பின் நோக்கம் என்ன? அல் குர்ஆனில் அது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தைக் குறிப்பிடுக?

02.     அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் யார் என அல்குர்ஆன் கூறுகிறது? அது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தைக் குறிப்பிடுக?


03.     எந்த ஐந்து கேள்விகளுக்கு விடைதராமல் மனிதன் மறுமையில் இறைவனின் நீதி மன்றத்திலிருந்து அகன்று செல்ல முடியாது என்று நபி (ஸல்) கூறினார்கள்?


04.     எந்த ஸஹாபியின்  மரணத்திற்காக அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்கியது அவரது பெயரைக் குறிப்பிடுக?


05.     ரமழான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட பிரதான இரண்டு யுத்தங்களைக் குறிப்பிடுக?


ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 2)


01.      நோன்பாளிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன’ என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் அந்த இரு சந்தோஷங்களும் யாவை?   குறித்த ஹதீஸை அரபியில் எழுதி அதன் மொழிபெயர்ப்பையும் தருக ?

02.      நபி (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படுவதன் அவசியம் குறித்து அல் குர்ஆன் கூறும் வசனங்களில் மூன்றைக் கூறுக?


03.     அல் குர்ஆனிலுள்ள  மிகவும் சிறிய குர்ஆன் வசனம் எது ?


04.     ஹதீஸுல்  குத்ஸி , ஹதீஸுன்  நபவி இரண்டிற்கும் இடையிலான வித்தியாசத்தை தெளிவு படுத்துக?


05.     இந்த சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர்  என அழைக்கப்பட்ட சஹாபியின் பெயர் என்ன?



 Ramadan 03

ஈமான் கொண்டவர்களை சோதிப்பதாக அல் குர்ஆன் கூறும் சில வசனங்களை எழுதி அதன் மொழிபெயர்ப்பையும் தருக? 

தீமையான செயல் புரிபவர்கள் மரணத் தருவாயில் பாவ மன்னிப்புக் கோருவது குறித்து அல் குர்ஆன் கூறுவது என்ன?

அல் குர்ஆனில் எத்தனை நபி மார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன? அதிகமாக பெயர் கூறப்பட்ட நபி யார்?

ஹதீஸ் மர்பூஉ என்றால் என்ன?

மனித வரலாற்றில் முதலாவது நோன்பு நோற்றவர் யார்? ஆதாரத்துடன் குறிப்பிடுக? 

Ramadan 04

ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழையமாட்டார்கள் என எவர்களைக் குறித்து அல்லாஹ்  தன் திருமறையில் கூறுகிறான்? குறித்த அல்குர்ஆன் வசனத்தை  அரபியில் எழுதி அதன் மொழிபெயர்ப்பையும் தருக?

ஷைத்தான்களின் சகோதரர்கள் என யாரைக் குறித்து அல் குர்ஆன் கூறுகிறது? அல் குர்ஆன் வசனத்தை முழுமையாக குறிப்பிடுக?

கலிபா உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட  அல் குர்ஆன் தற்போது எங்கிருக்கிறது?

உங்களில் (முஸ்லிம்களில்) சிறந்தவர்கள் என யாரைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? குறித்த ஹதீஸை முழுமையாக அரபியில் எழுதி அதன் மொழிபெயர்ப்பையும் குறிப்பிடுக?

அல்லாஹ்வினால்  பெயர் சூட்டப்பட்ட  நபிமார்கள் யாவர்?

Ramadan 05.

செய்த தருமங்களைச் சொல்லிக்காட்டுவதற்கு அல் குர்ஆன் கூறும் உவமை என்ன? மொழிபெயர்ப்புடன் அல் குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடுக?

நீதிபதிகள் எத்தனை வகைப்படுவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? குறித்த ஹதீஸை ஆதாரத்துடன் குறிப்பிடுக?

எந்த ஏழு நபர்களுக்கு மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்? ஆதாரத்துடன் குறிப்பிடுக?

ரமழான் மாதத்தில்  நடைபெற்ற பத்ர் யுத்தம் தரும் படிப்பினைகள் மூன்றை குறிப்பிடுக?

உலகின் முதன் முதலில் கொரோனா வைரஸ் எப்போது  கண்டறியப்பட்டது? 

Ramadan 06. 

‘கருக்கலைப்பு’  என்பது பாவமாகும் இது குறித்து வந்துள்ள  அல் குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடுக? 

கலந்தாலோசனை செய்வது தொடர்பாக  அல் குர்ஆன் கூறுவது என்ன? அல் குர்ஆன் வசனத்தை மொழிபெயர்ப்புடன்  குறிப்பிடுக?

ஜாஹிலிய்யா காலத்திலும் இஸ்லாத்திலும் 60 வருடங்கள் வாழ்ந்த ஸஹாபியின் பெயர் ? 

ரமளான் மாதத்தை குறிக்கும் அரபு சொல் அல் குர்ஆனில் எத்தனை தடவைகள் கூறப்பட்டுள்ளது? 

சமீபத்தில் ஆசியாவிலேயே முற்றிலுமாக மாணவிகளாலே உருவாக்கிய செயற்கை கோள் எது? 

Ramadan 07. 

தொழாதவர்களுக்காக அல்லாஹ் தயார் படுத்தி  வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயரையும் அது தொடர்பாக வந்துள்ள அல் அல்குர்ஆன் வசனத்தையும் குறிப்பிடுக?

வாழ்நாள் அதிகரிக்கப்படவும்,  உணவு விஸ்தீரிக்கப்படவும் விரும்புகிறவர்கள் என்ன செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? 

கதீஜா (ரலி) அவர்கள் மூலமாக நபி (ஸல்) அவர்களுக்குப் பிறந்த அப்துல்லாஹ் அவர்களுக்குரிய வேறு பெயர்கள் யாவை?

புனித ரமழான் மாதம் ஹிஜ்ரி மாதங்களில் எத்தனையாவது மாதமாகும்?

இலங்கை அரசால் அறிவியல் மற்றும் தொழினுட்ப சாதனைகளுக்காக வழங்கப்படும் விருது என்ன?

Ramadan 08. 

பெண்கள் எதற்காக பர்தா அணிய வேண்டுமென  அல்குர்ஆன் குறிப்பிடுகிறது ஆதாரத்துடன் குறிப்பிடுக?

அஹ்ஸாப் போரின் போது நாற்புறமும் ஆயிரக்கணக்கான எதிரிகளால் சுழப்பட்டிருந்த முஸ்லிம்களை எவ்வாறு காப்பாற்றியதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?  அல் குர்ஆன் வசனத்தை எழுதி அதன் மொழிபெயர்ப்பையும் குறிப்பிடுக?

அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள நிறங்கள் எவை? அவை எந்த சூராவில் குறிப்பிடப்பட்டுள்ளன?

ஸஹாபாக்களில் இறுதியாக மரணித்தவர் யார்? அவரின் வயது என்ன?

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் எது? 

Ramadan 09. 

அன்றியும் (நம்முடைய) தூதர் உங்களுக்கு எதை கொடுத்தாரோ அதை நீங்கள் (மனமொப்பி) எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களை தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.

இந்த அல் குர்ஆன் வசனத்தையும்  அமைதுள்ள சூராவையும் குறிப்பிடுக?

மறுமை நாளில் முஃமினின் தராசில் எவற்றை விட வேறெதுவும் கனமானதாக இருக்காது என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? ஆதாரத்துடன் குறித்த ஹதீஸின் மொழிபெயர்ப்பை குறிப்பிடுக?

மறுமையின் ஒரு நாள் உலகின் எத்தனை நாட்களுக்கு சமனாகும் என்று கூறப்பட்ட  அல் குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடுக

அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள இலக்கம் என்ன? அது எந்த சூராவில் கூறப்பட்டுள்ளது?

கொரோனா வைரஸினால்  உடலில் எந்த உறுப்பு அதிகம் பாதிப்படைகிறது?

Ramadan 10

அல்லாஹ் மன்னிக்காத மிகப்பெரும் பாவம் எது என அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது ? ஆதாரத்துடன் அதனை குறிப்பிடுக?

அல்லாஹ்வின் எந்த இரு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? குறித்த ஹதீஸை ஆதாரத்துடன் குறிப்பிடுக?

நபி ஆதம் அலை அவர்கள் எந்த நாளில் படைக்கப்பட்டார்கள்?

அல்குர்ஆனை முதன் முதலில் சத்தமாக ஓதிய ஸஹாபியின் பெயர் என்ன?

“ஜனநாயகம்” என்ற அரசியல் தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார் ? 
     



Ramadan 11. 


அல் குர்ஆனில் உள்ள மிகப்பெரிய வசனம் எது? வசனத்தின் மொழிபெயர்ப்பையும் நீங்கள் அவ்வசனத்திலிருந்து விளங்கும் இரண்டு விளக்கங்களையும் குறிப்பிடுக?

திருடர்களில் மிகவும் மோசமான திருடன் என்று யாரைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?  இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள நபிமொழியைக் குறிப்பிடுக? 

அபூபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் எந்த ஸஹாபியின் பொறுப்பில் எழுத்து வடிவில் முழுமையான அல் குர்ஆனாக தொகுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது?

எந்த ஸஹாபியை பார்த்து மலக்கு மார்கள் வெட்கப்பட்டார்கள்?

அனைத்து வகை பொதுப்போக்குவரத்தையும் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்த அனுமதியளித்த உலகின் முதல் நாடு எது?


Ramadan 12. 

ஒருவர் ஸலாம் கூறினால்  அதற்கு பதில் வழங்கும் அணுகுமுறை தொடர்பாக வழிகாட்டும்  அல் குர்ஆன் வசனம் எது?  

மனிதன் மரணித்த பின்பும் பயன் தரக் கூடிய அமல்கள் யாவை? குறித்த ஹதீஸை ஆதாரத்துடன் குறிப்பிடுக?

அபூபக்கர் (ரழி) அவர்களது ஆட்சிக் காலத்தில் எந்த ஸஹாபியின் பொறுப்பில் எழுத்து வடிவில் முழுமையான அல் குர்ஆனாக தொகுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது?

பதர் யுத்தம் தொடர்பாக எந்த சூராவில் கூறப்பட்டுள்ளது?

இலங்கையில்  ‘வத்ஹிமி’ மற்றும்  ‘கலேபண்டார’ என்று அழைக்கப்பட்ட குறைஷான் இஸ்மாயில் என்ற  இளவரசன் எந்த மன்னுடைய மகனாகும்? 


Ramadan 13.

“வீரமுள்ள செயல்” என்று அல்  குர்ஆன் எதனைக்  கூறுகிறது?  குறித்த வசனத்தின் மொழிபெயர்ப்பை ஆதாரத்துடன் தருக?

ரமளான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களை அடைந்தால் நபியவர்கள் என்ன செய்வார்கள் என்பதை விளக்கும் ஹதீஸ்கள் இரண்டினை மொழிபெயர்ப்புடன் ஆதார பூர்வமாக தருக? 

நபி மார்களின் பெயர்களில் இறக்கப்பட்டுள்ள  சூராக்களை குறிப்பிடுக?

மக்காவில் இறக்கப்பட்ட முதல் சூராவும்  இறுதி சூராவும் யாவை?

அல் குர்ஆனை முதலில் தமிழ் மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?


Ramadan 14. 

இஸ்லாத்தின் மத நல்லிணக்கம், மத சுதந்திரம் மற்றும் மத சகிப்புத்தன்மை தொடர்பாக  அல்  குர்ஆனில் எந்த வசனம் சிறப்பாக விவரிக்கிறது? 

“மக்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்துவது தொடர்பாக கூறப்பட்டுள்ள ஹதீஸ் ஒன்றை மொழிபெயர்ப்புடன் ஆதார பூர்வமாக தருக ? 

அல்லாஹ்வின் பெயரை தன்னுடைய பெயருடன் இணைத்து பெயர் வைத்துக் கொண்ட கலீபா  யார்?

தொழுகை நேரங்களை பெயராக கொண்டுள் இரண்டு சூராக்களையும் கூறுக?

வியாபாரிகள் மூலம் நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேள்விப்பட்டு இஸ்லாத்தை ஏற்ற கேரள மன்னர் யார்? 

Ramadan 15.

 “ உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்”  அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?

நோன்பு நோற்றிருக்கும் நிலையில் கடை பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் தொடர்பில் கூறப்பட்டுள்ள ஹதீஸ்கள் இரண்டினை ஆதாரத்துடன் குறிப்பிடுக? 

அனுமதிக்கப்பட்ட இஸ்லாமிய பொருளாதார நடவடிக்கைகளில் “இஆரா” என்பதன் பொருள் என்ன?

 ஸுபஹுத் தொழுகைக்கான அதானில் கூறப்படும் ‘அஸ்ஸலாத்து கைருன் மினன்னவ்ம்’ என்ற தொடரை முதலில் கூறியவர் யார்? 

19 ஆம் நூற்றாண்டில் முஸ்லிம் சமூகத்தின் எழுச்சியை நோக்காக கொண்டு முஸ்லிம் நேசன் மற்றும் முஸ்லிம் பாதுகாவலன் என்கின்ற இரு பத்திரிகைகள் வெளிவந்தன. முறையே அவ்விரு பத்திரிகைகளையும் வெளியிட்டவர்களையும்  குறிப்பிடுக? 

Ramadan 16.

ஈஸா (அலை) அவர்களின் சீடர்களான ஹவாரிய்யூன்கள் செய்த பிரார்த்தனை என்ன?  

ஒருவருக்கு அல்லாஹ் நலவை நாடினால், எதனை அவருக்கு கொடுப்பதாக நபியவர்கள் கூறினார்கள் இது தொடர்பாக கூறப்பட்டுள்ள முழுமையான  ஹதீஸை ஆதாரத்துடன் குறிப்பிடுக? 

தொழுகை கடமையாக்கப்பட்ட பின் நபியவர்கள் தொழுத முதலாவது தொழுகை எது ? 

அல் குர்ஆனில்  மூன்று எழுத்துக்களுடன் ஆரம்பிக்கும் சூராக்களின் எண்ணிக்கையை குறிப்பிடுக? 

இலங்கையின் சட்டத்துறையில் பங்களிப்பு செய்த முஸ்லிம் பிரமுகரை குறிப்பிடுக? 


Ramadan 17. 


‘நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; சுலைமானும், அவருடைய படையினரும் (உங்களைப்பற்றி) உணராது, உங்களைத் திண்ணமாக மிதித்துவிடவேண்டாம்’  அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?

ரமழான் மாதத்தில்  நோன்பு நோற்பதன் சிறப்புகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸ்கள்  இரண்டினை மொழிபெயர்ப்புடன் குறிப்பிடுக?

மர்யம் (அலை) அவர்களது பெயர் அல்குர்ஆனில் எத்தனை முறை கூறப்பட்டுள்ளது? 

‘முத்தபகுன் அலைஹி’ என்பதினூடாக உணர்த்தப்படுவது என்ன? 

இலங்கையில் இஸ்லாம் பற்றி குறிப்பிடும் “ புதூஹுல் புல்தான்” எனும் நூலின் ஆசிரியர் யார்?

Ramadan 18. 

“நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?

அல்லாஹ் ஒற்றையானவன்; ஒற்றையை விரும்புகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டு ஒரு சுன்னத்தான தொழுகையை தொழுமாறு மக்களை ஏவினார்கள் அந்த தொழுகை எது? ஆதாரத்துடன் குறித்த ஹதீஸை குறிப்பிடுக? 

ஒரே தடவையில் முழுமையாக இறக்கப்பட்ட சூரா எது? 

மதீனா அரசில் ‘ ஸாஹிபுஸ் ஸூக்’ எனும் பெயரில் அழைக்கப்பட்ட உத்தியோகத்தர் யார்?

இஸ்லாமிய உலகின் மிகப் பழைய சர்வதேச பல்கலைக்கழகம் எது? 

Ramadan 19. 

கல்வி ஞானம் கொடுக்கப்பட்டவர்களின் இதயத்தில் குர்ஆன் பாதுகாக்கப்படுகிறது என அல்லாஹ்  கூறும் முழுமையான வசனத்தை மொழிபெயர்ப்புடன் குறிப்பிடுக? 

“றய்யான்” என்ற சுவர்க்கத்தின் வாயில்  தொடர்பாக  அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸ் ஒன்றை ஆதாரத்துடன் குறிப்பிடுக?  

நபி (ஸல்) அவர்களுக்கு மதீனாவில் பிரத்தியேக செயலாளராக கடமையார்றிவர் யார்?  

இமாமுல் அஃழம் என்றும் இமாமுல் மதீனா என்றும் அழைக்கபட்ட இரு இமாம்களையும் குறிப்பிடுக

உலகின் முதல் நாடாக கொரோனா தடுப்பூசியை  மக்களுக்கு ஏற்றும் பணியை  ஆரம்பித்து வரலாற்றில் இடம்பிடித்துக் கொண்ட  நாடு எது ? 

Ramadan 20. 

‘ஆகவே எதை நீ தீர்ப்புக் கூற இருக்கிறாயோ அதை தீர்ப்புக் கூறிவிடு’ அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?

நபி (ஸல்) அவர்கள் அதிகமாக கேட்ட  பிரார்த்தனை எது? ஆதாரத்துடன் குறித்த பிரார்த்தனையைக் குறிப்பிடுக?

“சிறிய சூரத்துன் நிஸா” என்று அழைக்கப்படும் சூரா எது? 

மதீனாவில் நபி ஸல் அவர்களுக்கு முதலாவது கிடைக்கப்பெற்ற அன்பளிப்புப் பொருட்கள் எவை அவற்றை வழங்கிய நபித்தோழர் யார்?

இலங்கையில் அரபுத் தமிழ் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த அறிஞரின் பெயர் என்ன? 


Ramadan 21. 

1. “நிச்சயமாக நான் என் வயிற்றிலுள்ளதை உனக்காக உரிமை விடப்பட்டதாக நேர்ச்சை செய்து கொள்கிறேன்.” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?

2. மறுமை நாளில் இரண்டு சூராக்கள் அவைகளை ஓதியவர்கள் விடயத்தில்  அல்லாஹ்விடம் மன்றாடும்  என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்  அந்த இரண்டு சூராக்களும் எவை? அது தொடர்பாக  அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸை ஆதாரத்துடன் குறிப்பிடுக? 

3. அல்குர்ஆனின் நேர்வழி யாருக்கு கிடைக்குமென அல்லாஹ் கூறுகின்றான்? அல் குர்ஆன் வசனத்தை மொழிபெயர்ப்புடன் குறிப்பிடுக? 

4. ஒப்பந்தங்களை எழுதுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஸஹாபியின் பெயர் என்ன? முஸ்லிம்களால் இலங்கைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட போக்குவரத்து முறை எது? 


Ramadan 22. 

1. “நாங்கள் பலசாலிகளாகவும் கடுமையாக போர் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறோம்” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?

2. ஐந்து நேர தொழுகையை தொழும் ஒரு மனிதருக்கு கூறப்பட்ட உதாரணம்  என்ன? குறித்த ஹதீஸை ஆதாரத்துடன் குறிப்பிடுக? 

3. நபி ஸல் அவர்கள் ஒரு ஸஹாபியை பார்த்து “உமக்கு தாவுத் (அலை) அவர்களுடைய அழகிய தொனியில் ஒரு பகுதி வழங்கப் பட்டுள்ளது” என்று கூறினர்கள். அந்த ஸஹாபி யார் ?

4. ஏழைகளின் தாய் என அழைக்கப்பட்டவர் யார் ? 

5. முதலாவது வெளிவந்த தமிழ் பத்திரிகை எது? அது எந்த நாட்டில் வெளியிடப்பட்டது?   

Ramadan  23

1. “இந்தப் பூமியின் களஞ்சியங்களின் மீது (நிர்வாகியாக) என்னை ஆக்கி விடுங்கள்”  அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?

2. முஸ்லிம்களது நோன்பிற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் நோன்பிற்கும் இடையில் உள்ள வேற்றுமை என்ன?

இது தொடர்பாக அறிவிக்கப் பட்டுள்ள ஹதீஸை ஆதாரத்துடன் குறிப்பிடுக?

3. உமர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு காரணமாக இருந்த சூரா எது? 

4. விண்வெளி ஆய்வு நிலையமொன்றை பக்தாதில் நிறுவிய வானியல் அறிஞர் யார்? 

5.  இலங்கை அரசாங்கத்தால் குடிமக்களுக்காக வழங்கப்படும் கௌரவங்களில் மிகவும் உயர்ந்த மதிப்புடைய தேசிய கௌரவ விருதின் பெயர் என்ன? 

Ramadan 24

1. “உன்னைத்தவிர வணக்கத்துக்குரிய நாயன் (வேறு ஒருவரும்) இல்லை. நீ மிகவும் பரிசுத்தமானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாக ஆகி விட்டேன்” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?

2. நபி  (ஸல்) அவர்கள்  வேறெந்த நபிலான தொழுகைக்கும் முக்கியத்துவம் கொடுக்காத அளவுக்கு  ஒரு நபிலான தொழுகைக்கு அதிக முக்கியத்தவம் கொடுத்தார்கள் அந்த தொழுகை எது? ஆதாரத்துடன்  ஹதீஸை குறிப்பிடுக? 

3. எந்த நபியுடைய பெயர் அல் குர்ஆனில் அதிகமாக  கூறப்பட்டுள்ளது? எத்தனை தடவைகள் கூறப்பட்டுள்ளன? 

4. ஹதீஸ் அறிவிப்பாளர்களின் முழுமையான தகவல்களை உள்ளடக்கிய கலையின் பெயர் என்ன? 

5. உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள நாடு  எது? 

Ramadan 25. 

1. “எனக்கு நீங்கள் முன்னிலையாகி (அபிப்ராயம்) கூறாத வகையில் நான் எவ்விடயத்தையும் முடிவு செய்பவளல்ல” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?

2. உலக இலாபங்களை அடைவதற்கு மட்டும் கற்பவர் சுவர்க்கத்தின் வாடையைக்  கூட நுகர மாட்டார் என அறிவிக்கப் பட்டுள்ள ஹதீஸின்  முழுமையான ஹதீஸை ஆதாரத்துடன் குறிப்பிடுக?

3. “அறிவு பூரணத்துவம் பெற்றால் பேச்சு குறைவடையும்” என்று கூறிய ஸஹாபியின் பெயர் என்ன? 

4. காலித் பின் பகாயா என்ற சமயப் போதகரை இலங்கைக்கு அனுப்பிய கலீபா யார்? 

5. செயற்கை நுண்ணறிவின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வழங்கிய உலகின் முதல் நாடு எது? 

Ramadan 26. 

1. “எனக்காக நெருப்பை மூட்டி மாளிகையை எனக்காக கட்டுவாயாக; (அதில் ஏறி) மூஸாவின் இரட்சகனை நான் எட்டிப்பார்க்க வேண்டும்” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?

2. மக்களை நேர்வழியின் பக்கம் அழைத்தவருக்கு கிடைக்கும் பிரதிபலன் என்ன? ஹதீஸ் ஆதாரத்துடன் குறிப்பிடுக?

3. ஒரு குறிப்பிட்ட  சமூகத்திற்கு அல்லாஹ்வினால்  அனுப்பப்பட்ட முதலாவது இறைதூதர் யார்?  

4. இந்த உம்மத்தின் பிர்அவ்ன் என நபியவர்கள் யாரை குறித்து கூறினார்கள்? 

5. எதிர்கால செவ்வாய் கிரக பயணங்களில் கண்காணிப்பு பணிக்காக எந்த நாடு சமீபத்தில் ஒரு முன்மாதிரி Miniature Helicopter ஐ  உருவாக்கியுள்ளது? 

 

Ramadan 27. 

1. “ நீ உண்மை சொல்கிறாயா, அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா? என்பதை நாம் காண்போம்” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?

2. கடும் கஷ்டங்களை விட்டும், துர்ப்பாக்கியம் வந்தடைவதை விட்டும், தீய விதியை விட்டும், விரோதிகள் மகிழ்ச்சியடையும் சிரமங்களை விட்டும் பாதுகாப்பு தேட நபியவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனையை ஆதாரத்துடன் குறிப்பிடுக?

3. மூன்று எழுத்துக்களுடன் ஆரம்பிக்கும் சூராக்கள் எத்தனை அல்குர்ஆனில் இருக்கின்றன? 

4. “ஏழைகளின் தந்தை”  என அழைக்கப்பட்ட ஸஹாபி  யார்?

5. கருங்கடற்கரையில் பேரளவில் இயற்கை எரிவாயு இருப்பை கண்டறிந்த நாடு எது? 


Ramadan 28. 

1. “அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கு ஸுலைமானுடன் தானும் முற்றிலும் கீழ்படிந்து இஸ்லாமாகி விட்டேன்” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?

2. இருவரின் மீது பொறாமை கொள்ள முடியும் என அறிவிக்கப் பட்டுள்ள ஹதீஸை ஆதாரத்துடன் குறிப்பிடுக? 

3. “அதிகம்  நோன்பு நோற்கக்கூடியவர்” “அதிகம் நின்று வணங்கக் கூடியவர்”என்று அழைக்கப்பட்ட  நபிகளாரின் மனைவி யார்? 

4. மதீனாவில் இறுதியாக மரணித்த ஸஹாபியின் பெயர் என்ன? 

5. காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் முயற்சியாக எந்த புகழ்பெற்ற நகரம் சமீபத்தில் 30 கிமீ போக்குவரத்து வேக வரம்பை அறிமுகப்படுத்தியது? 


Ramadan 29. 

1. “ நிச்சயமாக நான் அவர்களிடம் ஓர் அன்பளிப்பை அனுப்பி வைக்கக் கூடியவர்களாக இருக்கிறேன்; பின்னர் தூதர்கள் என்ன பதில் கொண்டு வருகிறார்கள் என்பதை நான் பார்க்கப்போகிறேன்” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?


2. ஓர் அடியான் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இருக்கும் இடம் எது? ஹதீஸ் ஆதாரத்துடன் குறிப்பிடுக? 


3. ஸஹாபாக்களில் மதீனாவுக்கு முதலாவது ஹிஜ்ரத் செய்த ஸஹாபி யார்?


4.   முஹாஜிர்களில் மதீனாவில் பிறந்த முதல் ஸஹாபி யார்? 

5. உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) ‘Variant of Concern’ ஆக வகைப்படுத்தப் பட்ட, தென்னாபிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட புதிய மாறுபாட்டின் பெயர் என்ன? 


Ramadan 30. 

1. “என் இரட்சகனே எனக்கோர் அத்தாட்சியை ஆக்குவாயாக” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக? 

2. “சுவர்க்கத்தின் பொக்கிஷங்களில் இருந்தும் ஒரு பொக்கிஷம்” என்று நபியவர்கள்  கூறியது எது? ? ஹதீஸ் ஆதாரத்துடன் குறிப்பிடுக? 

3. அபு இஸ்ஹாக் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்ட ஸஹாபி யார்? 

4. குலபாஉர் ராஷிதூன்களில் 12வருடம் ஆட்சி புரிந்த கலீபா யார்? 


5. அரபுலகில் எந்த நாட்டில்  முதல் அணு உலை தொடங்கப்பட்டுள்ளது?.


No comments

Powered by Blogger.