Header Ads



கோட்டாபய விலகினால், 113 பெரும்பான்மையுடன் SJB இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் - நாமலுக்கு ஹர்ஸ பதிலடி

 


இலங்கையில், அனைத்துக் கட்சிகளின் பங்களிப்புடன் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆவணங்களை தயாரித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா  தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அனைத்துக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு, அனைத்து பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து குறிப்பிட்ட காலத்திற்குள் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

நாமல் ராஜபக்ஸவின் கருத்துக்கு பதில் வழங்கும் வகையில் ஹர்ஷ டி சில்வா தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால், 113 இற்கும் அதிகமான பெரும்பான்மையுடன் ஐக்கிய மக்கள் சக்தி இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் என ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் எனும் நாட்டு மக்களின் கோரிக்கைக்கு, அவர் மதிப்பளிக்க வேண்டும் எனவும் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.