Header Ads



பிரியந்த குமார கொலை செய்யப்பட்ட காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியவருக்கு சிறைத்தண்டனை


இலங்கையரான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட காட்சி அடங்கிய காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபருக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. 

குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அட்னன் என்ற குறித்த நபர் முன்னதாக நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டாரென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையரான பிரியந்த குமார பாகிஸ்தான் - சியல்கொட் பகுதியில் வைத்து கடந்த டிசம்பர் 3ஆம் திகதி அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 100க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, அண்மையில் பிரியந்த குமாரவின் மனைவிக்கு வர்த்தக சங்கத்தினால் 100,000 அமெரிக்க டொலர் வழங்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த செயல் வரவேற்கத்தக்கது என தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

அத்துடன், பிரியந்தவின் மாதாந்த வேதனமும் அவரது மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளதாக இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.