Header Ads



இப்படியும் உழைக்கிறார்கள் - வரிசையில் நிற்க 500 ரூபாய் கூலி


சமையல் எரிவாயு, அரிசி, சீனி, பால் மா ஆகியவற்றை கொள்வனவு செய்ய வரிசைகளில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதால், பலர் அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றனர்.

நாடு மீண்டும் 70 ஆம் ஆண்டுகளின் வரிசை யுகத்தை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதாக சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் அண்மைய நாட்களில் வெளியிட்டிருந்த தமது பதிவுகளில் கூறியிருந்தனர்.

பல அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் பல வரிசைகளில் நிற்க முடியாது என்பதால், வரிசைகளில் நிற்க வைக்க வேறு நபர்களை கூலிக்கு அமர்த்த வேண்டியுள்ளதாக சமூக ஊடகங்களில் கேலியாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இது சம்பந்தமாக சில ஊடகங்கள் கார்ட்டூன்களை கூட வெளியிட்டிருந்தன. எனினும் அந்த கேலியானது தற்போது உண்மையாக மாறியுள்ளது.

500 ரூபாயை அறவிட்டுக்கொண்டு வரிசைகளில் நிற்கும் நபர்கள் தொடர்பான தகவல்கள் கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து கிடைத்துள்ளது.

தொழில் புரியும் பலர் எரிவாயு வரிசைகளில் நிற்பதற்கு விடுமுறைகளை பெற முடியாது என்ற காரணத்தினால், 500 ரூபாயை செலுத்தி வேறு நபர்களை வரிசையில் நிற்க வைக்க நவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பு நகரில் சில இடங்களில் சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்ய இரண்டு நாட்கள் வரை வரிசையில் நிற்க வேண்டியுள்ளதாகவும் இதனால், விருப்பமின்றியேனும் 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை செலவிட நேரிட்டுள்ளதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.    TW

1 comment:

  1. Sri Lanka intelligence government give the new jobs for lazy guys.

    ReplyDelete

Powered by Blogger.