Header Ads



ஆபாச வார்த்தை கூறும் சர்ச்சைக்குரிய Mpக்கு "கத்தரிக்காய் குட்டி" என பெயர் சூட்டிய எதிர்க்கட்சி


நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை ஆபாச வார்த்தைகளால் விமர்சித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சிக்கு  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய பெயரை சூட்டியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ஹர்சன ராஜகருண  இந்த புதிய பெயரை சூட்டியுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ஹர்சன ராஜகருண, ஹம்பாந்தோட்டை துறைமுகம், மாநாட்டு மண்டபம் ஆகியவற்றுக்காக பெற்ற கடன் பற்றி பேசினார்.

ஹர்சன ராஜகருணவின் கருத்து தவறானது எனவும் அதனை திருத்திக்கொள்ளுமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ச  கூறி, தொடர்ந்தும் ராஜகருணவின் உரைக்கு தடையேற்படுத்தினார்.

ஹர்சன ராஜகருண, அமைச்சர் நாமல் ராஜபக்ச கூறியதை கவனத்தில் கொள்ளாது எதனையும் அறியாது பேசுவதாக கூறி, திஸ்ஸ குட்டி ஆராச்சியும் நாமல் ராஜபக்ச சார்பில் இந்த பிரச்சினையில் தலையிட்டார்.

தினமும் இரவுகளில் பிரதமரின் வீட்டுக்கு சென்று பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோருவதாக குட்டி ஆராச்சி குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த ஹர்சன ராஜகருண, “கத்தரிக்காய் குட்டி” அமருங்கள் எனக் கூறினார். 

No comments

Powered by Blogger.