பதவி விலகுகிறாரா அலி சப்ரி ...? நாளை திங்கட்கிழமை பதில் சொல்கிறேன் என்றார்
- AAM. Anzir -
நீதியமைச்சர் அலி சப்ரியை, வட்சப் மூலம் தொடர்பு கொண்ட Jaffna Muslim இணையம் ஒரு நாடு ஒரு சட்டம் செயலணி குறித்து என்ன நினைக்கிறீர்கள், ஞானசாரரை தலைவராக நியமித்ததை ஏற்றுக் கொள்கிறீர்களா, நீங்கள் பதவி விலக இருக்கிறீர்களாமே..? என 3 தொடர் கேள்விகளை அவரிடம் தொடுத்தது.
இவற்றுக்கு மிக சுருக்கமாக பதில் வழங்கிய அலி சப்ரி, திங்கட்கிழமை வரை பொறுத்திருங்கள். இதுபற்றி கூறுகிறேன் என்றார்.
அதேவேளை, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் Jaffna Muslim இணையத்திடம் கூறுகையில், ஒரு நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி குறித்து அதிருப்தி அடைந்துள்ள அலி சப்ரி, தாம் அமைச்சுப் பதவியிலிருந்து விலக உள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, ஜனாதிபதி ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியை ஸ்தாபித்தமை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
செயலணியை உருவாக்குவது குறித்து, என்னுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளவில்லை, எனக்கு இது குறித்து மகிழ்ச்சியில்லை என அவர் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார் யாரும் அவசரப்படத் தேவையில்லை.
ReplyDeleteநீங்கள் ஏன் அவருக்கு பிரச்சினைகளை உருவாக்குகிறீர்கள். அலி சப்ரி தனது வேலையைச் செய்யட்டும், இன்ஷா அல்லாஹ்.
ReplyDeleteNoor Nizam - Convener "The Muslim Voice".
பதவி விலகுவது என்பது படுமுட்டாள்த்தனம் - இருக்கக் கிடைத்த இடத்தை உதைத்துத் தள்ளிவிட்டு இன்னொரு இடம் தேடும் முட்டாள்த்தனம் போன்றது.
ReplyDeleteபோராட - இருப்பதில் இருந்துகொன்டுதான் செய்ய வேன்டும் - இடத்தைக் காலி செய்துவிட்டல்ல.............