Header Ads



ஏறாவூர் இளைஞனை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை – சரத் வீரசேகர


மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமாரியாகத் தாக்குதலை நடத்திய பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மோட்டார் வண்டியில் பயணித்தவரை பொலிஸார் நிறுத்தியபோதும், அதனைப் பொருட்படுத்தாமல் குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்றதாலேயே பொலிஸ் அதிகாரி தாக்குதல் நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.

பொலிஸ் அதிகாரி தாக்கும் வகையிலான காணொளி வெளியாகி நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அமைச்சர் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் அதிகாரிக்கு தாக்குதலை நடத்த எந்த உரிமையும் இல்லை எனத் தெரிவித்துள்ள சரத் வீரசேகர, சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப் படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு பொலிஸ் நிலையங்களுக்குப் பொறுப்பான அதிகாரி அல்லது பிற கீழ் நிலை அதிகாரிகள் ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைக் கண்டறிந்தால் உதவி பொலிஸ் அத்தியட்சர்(ஏ.எஸ்.பி) மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.