Header Ads



பதவி இழப்பாரா பவித்ரா..? புதிய சுகாதார அமைச்சராக Dr ரமேஷ் பத்திரண...??


பவித்ரா வன்னியாராச்சி தனது சுகாதார அமைச்சர் பதவியை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் என்ற முறையில் கோவிட் தொற்றுநோய்க்கு தீர்வு காண, சுகாதார அமைச்சு உட்பட சுகாதாரத் துறையை வழிநடத்த பவித்ரா வன்னியாராச்சி திறமையற்றவர் என்பதை அரச அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மிக விரைவில் சுகாதார அமைச்சர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்க அரசு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அமைச்சரவையில் இருந்து தகுதியான ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், இதன்படி, புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. களவாடுவதில் திறன்குறைந்த ஒரு கள்ளன் போக மற்றொரு கள்ளன் வருகின்றான். அவன் களவுகளை நுணுக்கமாக நடாத்தும் திறன் அவனுக்கு இருக்கின்றது என்றால் அதுதான் அமைச்சுப்பதவிக்கு உரிய தகைமை.

    ReplyDelete

Powered by Blogger.