Header Ads



இலங்கையில் அமைதியான முறையில் எதிர்ப்பு, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமை மதிக்கப்பட வேண்டும் - ஐ.நா.


நாட்டில் அமைதியான முறையில் எதிர்ப்பார்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமை மதிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர், தமது டுவிட்டர் பதிவொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதர உரிமைகள், கருத்து வெளியிடும் சுதந்திரம் மற்றும் மக்கள் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்தும் விடயங்களில், அமைதியான முறையிலான ஆர்ப்பாட்டங்கள் உதவுகின்றன.

கொவிட் பரவல் தடுப்புக்காக அமுலாக்கப்படுகின்ற நடவடிக்கைகள், பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு சட்டவிதிகளுக்கு அப்பால் செல்லக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மைக்காலமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றவர்கள் கொவிட் 19 தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படுகின்ற நிலையில் இந்த வலியுறுத்தல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் தனிமைப்படுத்தல் விதிகளின் கீழ் கைது செய்யப்படுகின்றமையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் எதிர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.