Header Ads



நாடு பெரும் நெருக்கடியில் உள்ளது, குழப்பிய குட்டையில் மீன்பிடிக்க எத்தரப்பினருக்கும் அனுமதிக்க மாட்டோம்


மின்வலு அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எட்டப்படுமெனத் தெரிவித்த SLPP கட்சியின் பொதுச் செயலாளர் சாஹர காரியவசம் எம்.பி, எதிர்க்கட்சியின் பொறிக்குள் சிக்கிக்கொள்ள தாங்கள் தயாரில்லை என்றார்.

அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளிவிட முயற்சிக்கும் இந்தப் பொறிக்குள் சிக்கிக்கொள்ள நாங்கள், தயாரில்லை, எனினும், அடுத்தடுத்த கட்டங்கள் குறித்து ஆராய்ந்து முடிவெடுப்போம்.

கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சி என்றடிப்படையில், எமது நிலைப்பாட்டில் தாம் உறுதியாகவே இருப்பதாகத் தெரிவித்த அவர், எதிர்க்கட்சியை நாம் பலப்படுத்த மாட்டோம். எனினும், கட்சி என்பதற்கப்பால், நாடு என்ற ரீதியில் தீர்மானங்களை எடுப்போம் என்றார்.

நம்பிக்கையில்லாப் பிரரணையின் போது, நடுநிலை வகிப்பதா? உங்களுடைய முடிவு​? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மேற்படி விவகாரத்தில், கட்சி என்றடிப்படையில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட முடிவுகளில்தான் இன்றும் இருக்கின்றோம்என்றார்.

எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே நாங்கள் நின்கின்றோம். நாடு பெரும் நெருக்கடியில் உள்ளது. இப்படியான சந்தர்ப்பத்தில் குழப்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு எத்தரப்பினருக்கும் இடமளிக்கமாட்டோம். மிகவும் சிரமப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கத்தை குழப்பவும் இடமளிக்கமாட்டோம் என்றார்.

No comments

Powered by Blogger.