பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை
பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை திகழவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் உற்பத்தி செய்த பைசர் கொவிட் தடுப்பூசி நாளை நாட்டிற்குத் தருவிக்கப்படும். 26 ஆயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு கொண்டுவரப்படும். இதேவேளை, அடுத்த வாரம் மேலும் 25 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளன. அத்துடன் எதிர்வரும் சில வாரங்களில் இரண்டு லட்சம் பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்குத் தருவிக்கப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். IBC

Should be taken at earliest.....Now just words for political
ReplyDelete