Header Ads



ரணில் - அத்துரலிய தேரரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துச்செய்ய நீதிமன்றில் மனு


ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில்விக்கிரமசிங்க மற்றும் எங்கள் மக்கள் சக்தியின் அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துச்செய்யவேண்டும் என கோரும் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை நாகனந்த கொடித்துவக்கு உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ளார்.

2020 ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி தேர்தல் ஆணையகம் அனைத்து கட்சிகளினதும் செயலாளர்களுக்கு தேசியபட்டியலை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தது என நாகனந்த கொடித்துவக்கு தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

ஆனால் தேர்தல் ஆணையகம் வேண்டுகோள் விடுத்தபடி ஐக்கியதேசிய கட்சியோ அல்லது எங்கள் மக்கள் சக்தியோ செயற்படவில்லை என அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் இருவரையும் நாடாளுமன்ற உறுப்பினராக ஏற்றுக்கொள்ளும் தேர்தல் ஆணைக்குழுவின்  செயற்பாடு அரசமைப்பிற்கு முரணானது என அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனதும் மக்களினதும் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என அவர் தனது மனுவில்தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. how many national seats won by 'our people party'?

    ReplyDelete

Powered by Blogger.