Header Ads



நான் UNP யிலேயே அங்கம் வகிக்கின்றேன் - ரவி


ஐக்கிய தேசியக் கட்சியிலேயே தாம் தொடர்ந்தும் அங்கம் வகித்து வருவதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான சர்ச்சை காரணமாக ரவி கருணாநாயக்க அண்மைக் காலமாக எவ்வித அரசியல் கருத்துக்களையும் வெளியிடவில்லை.

ரவி கருணாநாயக்க அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளதாக சில தரப்பினர் கருத்து வெளியிட்டிருந்தனர்.

எனினும், தாம் செய்ற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதாகவும அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை ஓரம் கட்டுவதில் சிலர் காட்டிய முனைப்பு தமது எதிர்த்தரப்பினரை விரட்டுவதற்கு காட்டவில்லை அதுவே தற்போதைய பிரச்சினை என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

3 comments:

  1. ஐக்கிய தேசியக்கட்சி மண்ணைக் கவ்வுவதற்கு உறுதுணையாக இருந்தவர் தான் இவர். இது போன்ற அலிபபாக்கள் இருக்கும் வரை இலங்கையில் எந்த ஒரு கட்சியும் உருப்படாது.பதிலாக சிறையில் செத்துமடியும்வரை சிறைப்படுத்த மாத்திரம் தகுதியான அலிபபா.

    ReplyDelete
  2. ஐக்கிய தேசியக்கட்சி மண்ணைக் கவ்வுவதற்கு உறுதுணையாக இருந்தவர் தான் இவர். இது போன்ற அலிபபாக்கள் இருக்கும் வரை இலங்கையில் எந்த ஒரு கட்சியும் உருப்படாது.பதிலாக சிறையில் செத்துமடியும்வரை சிறைப்படுத்த மாத்திரம் தகுதியான அலிபபா.

    ReplyDelete
  3. Stick to the UNP. It is the IDEAL Party for "Royal" Nincompoops like you and your Boss Ranil. If you both stick on with the UNP, you both will have the Great Honour to precipitate its END which will be a GREAT SERVICE to the country - Perhaps, the ONLY Contribution from the two of you to the country

    ReplyDelete

Powered by Blogger.