Header Ads



கப்பல் தீ விபத்தினால் கடலில் கசிந்த, எரிபொருளை உறிஞ்சி எடுக்க முடியுமா..?


கொழும்பு துறைமுகக்கடலில் தீப்பரவலுக்கு உள்ளான கப்பல் மூலம் கடலில் பரவியுள்ள இரசாயனத்தினை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை பயன்படுத்தி கொழும்பு துறைமுகக்கடலில் தீப்பரவலுக்கு உள்ளான கப்பல் மூழ்கிக்கொண்டிருக்கும் பகுதியில் இரசாயனங்களையும் எண்ணெய்யையும் பிரித்தெடுக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ஒருவர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

​​புதிய முறை கடலுக்கு ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தணிப்பது, எண்ணெய் கசிவைத் தடுப்பது மற்றும் எண்ணெயை சேகரிப்பது என்பவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிராப்டி என்ற கனிமப் பொருளை கொண்டு செயற்படுத்தப்படும் இந்த முறை மூலம் கடலில் கசிந்த எரிபொருளை உறிஞ்சி எடுக்க முடியும். அத்துடன் உறிஞ்சி எடுத்த எண்ணெயை பயன்படுத்தவும் முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பேராதெனிய பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் காமினி ராஜபக்ஷ, பேராசிரியர் அமரசேன மற்றும் பேராசிரியர் டி.ஆர்.ஏ. குமார ஆகிய மூன்று பிரபல விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியின் இறுதி முடிவிலேயே இந்த முறை உருவாக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.