Header Ads



500 மில்லியன் ரூபா பெறுமதியான தாய்லாந்து தூதரக காணியை, போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த சட்டத்தரணி கைது

தாய்லாந்து தூதரகத்துக்கு உரித்தான காணியொன்றை போலி ஆவணங்கள் ஊடாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி ஆவணங்களை தயாரித்தமை, அதற்காக ஆதரவளித்த குற்றச்சாட்டு மற்றும் நொத்தாரிசு கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சட்டமா அதிபரினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 7, சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கரா மாவத்தையில் அமைந்துள்ள சுமார் 500 மில்லியன் ரூபா பெறுமதியான காணியை  சந்தேகநபர் விற்பனை செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய விற்பனையாளரான சட்டத்தரணி மற்றும் காணியை வாங்கிய மற்றொருவர் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.