Header Ads



சஜித்துடன் நெருங்கிய Mp க்களை அடையாளம் காண நடவடிக்கை, CCTV பதிவுகளை பயன்படுத்தவும் திட்டம்


எதிர்கட்சி தலைவருடன் இணைந்து செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசவுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

எதிர்கட்சி தலைவர் வியாழக்கிழமை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டார் என பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அன்று காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலும் எதிர்கட்சி தலைவர் கலந்துகொண்டிருந்தார்.

எதிர்கட்சி தலைவருடன் நாடாளுமன்றத்தில் நெருக்கமாக இணைந்து பணியாற்றியவர்களை அடையாளம் காண்பதற்கு சிசிடிவி கமரா பதிவுகளை பயன்படுத்தப்போவதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் காணப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சுயதனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்மத்தும பண்டார தனிமைப்படுத்தலை முன்னெடுத்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. TL 


2 comments:

  1. "The Muslim Voice" prays God AllMighty Allah, that God AllMighty Allah should extend his grace to the leader of the opposition and to his wife to over come the dangers of COVID19 and return to normal activities from the quarantine period. "The Muslim Voice" wishes the same to all MP's who are affected by this pandemic at the moment. "PREVENTION IS BETTER THAN CURE" should be a social law all politicians should begin to pratice even at this late hour of the pandemic in Sri Lanka.
    Noor Nizam - Convener "The Muslim Voice".
    Tamil content:
    "முஸ்லீம் குரல்" சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறது. சர்வவல்லமையுள்ள அல்லாஹ் தனது கிருபையை எதிர்க்கட்சித் தலைவனுக்கும் அவரது மனைவிக்கும் நீட்டிக்க வேண்டும், COVID19 இன் ஆபத்துக்களை மீறி தனிமைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து சாதாரண நடவடிக்கைகளுக்கு திரும்ப வேண்டும். இந்த நேரத்தில் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் "முஸ்லீம் குரல்" இதை நாங்கள் விரும்புகிறோம்.
    இலங்கையில் தொற்றுநோயின் இந்த பிற்பகுதியில் கூட அனைத்து அரசியல்வாதிகளும் "தடுப்பு என்பது சிறந்தது"என்பதை பின்பற்றத் தொடங்க வேண்டிய பயிற்சி ஒரு சமூகச் சட்டமாக வேண்டியது.
    நூர் நிஜாம் - கன்வீனர் "தி முஸ்லீம் குரல்".

    ReplyDelete
  2. "முஸ்லீம் குரல்" சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறது. சர்வவல்லமையுள்ள அல்லாஹ் தனது கிருபையை எதிர்க்கட்சித் தலைவனுக்கும் அவரது மனைவிக்கும் நீட்டிக்க வேண்டும், COVID19 இன் ஆபத்துக்களை மீறி தனிமைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து சாதாரண நடவடிக்கைகளுக்கு திரும்ப வேண்டும். இந்த நேரத்தில் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் "முஸ்லீம் குரல்" இதை நாங்கள் விரும்புகிறோம்.
    இலங்கையில் தொற்றுநோயின் இந்த பிற்பகுதியில் கூட அனைத்து அரசியல்வாதிகளும் "தடுப்பு என்பது சிறந்தது"என்பதை பின்பற்றத் தொடங்க வேண்டிய பயிற்சி ஒரு சமூகச் சட்டமாக வேண்டியது.
    நூர் நிஜாம் - கன்வீனர் "தி முஸ்லீம் குரல்".

    ReplyDelete

Powered by Blogger.