வெளி மாகாணத்தவர்களுக்கு தங்குமிடம், வழங்கினால் சட்ட நடவடிக்கை – அஜித் ரோஹண
வெளி மாகாணங்களிலிருந்து வரும் நபர்களுக்குத் தங்குமிடம் வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வெளி மாகாணங்களிலிருந்து வரும் நபர்களுக்குத் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் வெளிமாகாணங்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்கியிருப்பதை முற்றாகத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Thinakkural

Post a Comment