Header Ads



தனது தலையை வெட்டி காணிக்கை, செலுத்திய பெளத்த துறவி - ஏன் தெரியுமா..?


தாய்லாந்தில் பெளத்த துறவி ஒருவர், மறு வாழ்வில் தமக்கு நன்மை கிடைக்கும் பொருட்டு தனது தலையை வெட்டி புத்தருக்கு காணிக்கை செலுத்தியுள்ளார்.

குறித்த நிகழ்வுக்காக 68 வயதான அந்த பெளத்த துறவி, நீண்ட 5 ஆண்டுகள் காத்திருந்ததாக அவரது சீடர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு தாய்லாந்தில் வாட் புஹிங்காங் மடத்தின் மடாதிபதியாக இருந்த தம்மகோர்ன் வாங்க்பிரீச்சா கடந்த வியாழக்கிழமை தனது தலையை வெட்டி வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

புத்தர் பீடத்திற்கு அருகாமையில் வைத்து தம்மகோர்ன் தமது தலையை வெட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. துறவி தம்மகோர்னின் உடலைக் கண்ட அவரது மருமகன், துறவி கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் மீட்டதாக கூறினார்.

அதில், புத்தரை திருப்திப்படுத்துவதற்காகவே தாம் சொந்த தலையை வெட்டி காணிக்கை செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதற்காக தாம் நீண்ட 5 வருடங்கள் காத்திருந்ததாகவும், மறு வாழ்வில் தாம் ஒரு முதன்மையான துறவியாக பிறக்க புததர் ஆசி வழங்கட்டும் எனவும் தம்மகோர்ன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 11 ஆண்டுகளாக மடாதிபதியாக செயல்பட்டு வந்துள்ள தம்மகோர்ன், மறுவாழ்வில் நன்மை கிடைக்க சொந்த தலையை வெட்டி காணிக்கை செலுத்துவதே ஒரே வழி என நம்பியுள்ளார்.

இதனிடையே, தகவல் அறிந்து மடத்திற்குள் திரண்ட சுமார் 300-கும் அதிகமான பக்தர்கள் துறவியின் இறுதிச்சடங்குகளுக்கு ஆயத்தமான நிலையில்,

பொலிசார் விரைந்து வந்து, துறவியின் உடலை கைப்பற்றியதுடன், உடற்கூராய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், துறவி இறந்ததன் பின்னணி உறுதி செய்யப்பட்ட பின்னர் உறவினர்களுக்கு சடலத்தை ஒப்படைக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.  

No comments

Powered by Blogger.