Header Ads



இந்தியர்கள் 14 நாள் தனிமைப்படுத்தலுக்காக இலங்கை வருவது மிகவும் ஆபத்தானது - PHI


14 நாட்கள் தன்மை தனிமைப்படுத்திக்கொள்ள இலங்கைக்கு வரும் இந்தியர்கள் காரணமாக நாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் விடுதிகளில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களின் உயிருக்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவிட் -19 தொற்று வேகமாகப் பரவி வருவதன் காரணமாக இந்தியர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் செல்ல முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்தியர்கள் இலங்கைக்கு வந்து 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்ட பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் காணப்படும் கோவிட் பரவல் நிலைமை காரணமாக இந்தியர்கள், தன்மை தனிமைப்படுத்திக்கொள்ள இலங்கைக்குள் வர இடமளிக்கப்பட்டுள்ளதால், ஏற்பட்டுள்ள ஆபத்து மேலும் உக்கிரமடையும்.

இதனால், இது குறித்து அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் உபுல் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.