Header Ads



முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவே இருந்தன, வாக்களிப்பதைத் தடுத்தன என்பதில் உண்மையில்லை - சரத் வீரசேகர


ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அது இலங்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் யு.என்.எச்.ஆர்.சி யின் பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கைக்கு கட்டாயமில்லை என்றும் அதை கட்டாயப்படுத்த மனித உரிமைகள் பேரவைக்கு அதிகாரம் இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது யு.என்.எச்.ஆர்.சியின் தீர்மானம் 30/1 ற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியதாக வீரசேகர தெரிவித்தார்.ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த தீர்மானத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதால் யு.என்.எச்.ஆர்.சி அத்தகைய அழுத்தத்தை செலுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று (28) நடைபெற்ற நிகழ்வின்போது போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தை சமர்ப்பித்த நாடு மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளில் 25 நாடுகளின் ஆதரைவப் பெறத் தவறிவிட்டதாகவும், அதன்படி தீர்மானம் பெரும்பான்மையான உறுப்பினர்களின் அனுமதியின்றி நிறைவேற்றப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை வீரசேகரரின் நடவடிக்கைகளும் அவரது அண்மைய முஸ்லிம் விரோத கருத்துக்களும் பெரும்பான்மையான முஸ்லிம் நாடுகள் தீர்மானத்தில் வாக்களிப்பதைத் தடுக்க உதவியது என்று சில கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

குறிப்பாக புர்காவை தடைசெய்யும் முயற்சியே இதற்கு காரணம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும் அதில் எந்தவித உண்மையும் இல்லை என்று சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாகிஸ்தான், சோமாலியா, பங்களாதேஷ் உள்ளிட்ட எத்தனை முஸ்லிம் நாடுகள் புர்காவை தடை செய்வதற்கான திட்டம் இருந்தபோதிலும் இலங்கைக்கு ஆதரவாக இருந்தனவே என்று அவர் கேள்வி எழுப்பினார்.

2 comments:

  1. சர்வதேசம் பற்றியும் மனித உரிமை,ஜெனீவா பற்றிய எந்த விதமான அறிவோ ஞானமோ இல்லாத உப்பேகள் தெரிவிக்கும் இது போன்ற கருத்துகளின் விளைவாக சர்வதேச மட்டத்தில் இன்னும் இன்னும் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.