Header Ads



பாடசாலை மாணவிகளுக்கு நப்கீன் இலவசம்..?


இலங்கையிலுள்ள பாடசாலைகளில் மாணவிகளுக்கு மாதவிடாய் காலப்பகுதியில் பயன்படுத்தும் நப்கீனை இலவசமாக வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

6ஆம் வகுப்பு முதல் உயர்தரம் வரை கற்கும் 12 லட்சத்திற்கும் அதிகமான மாணவிகள்ள மாதாந்தம் மாதவிடாயின் போது இரண்டு நாட்கள் பாடசாலைக்கு வருவதனை தவிர்ப்பதாக கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் குறித்த மாணவிகளின் கல்வி நடவடிக்கைக்கு தடை ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

நகரம் மற்றும் கிராமபுர பிரதேசங்களில் அரச பாடசாலைகளுக்கு வரும் மாணவிகளில் 65 வீதமானோர் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் பிள்ளைகளாகும். அவர்களுக்கு குறைந்த வருமானம் காரணமாக நப்கீனை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனால் மாணவிகளுக்கு மனரீதியாகவும் மற்றும் சுகாதார ரீதியாகவும் மேம்படுத்துவதற்காக பேட் இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கல்வி அமைச்சர் இணைந்து  அமைச்சரவையில் தெளிவுபடுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Appa avaru jockers ippa atha neengale seireenga conj ovarthaan but win panninathu ennavo sajith thaan bro

    ReplyDelete

Powered by Blogger.