Header Ads



அடுத்த சில நாட்களில் புதிய கொரோனா பரவல்கள் உருவாககூடும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்


நாடளாவியரீதியில் அடுத்த சில நாட்களில் புதிய கொத்தணிகள் உருவாக கூடும் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் அச்சம் வெளியிட்டுள்ளது.

அடுத்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து புதிய கொத்தணிகள் உருவாககூடும் என்ற அச்சம் காணப்படுகின்றது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் கொழும்பு மாநகரசபை பிரிவிற்குள் கொரோனா பரவல் ஒரளவு குறைவடைந்துள்ளது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.

களுத்துறை பேருவளை பொல்காவல மொனராகல திருகோணமலை காத்தாண்குடி மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் நிலைமை மோசமடைகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தில் பொதுமக்கள் மேல்மாகாணத்தை விட்டு வெளியேறியதன் காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டில் புதிய பரவல்கள் ஆரம்பமாகலாம் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.