உதவி கோரல் - சிறிய தொகையையேனும் வைப்பிலிட்டு உதவுங்கள்
ஏழ்மை நிலையிலுள்ளவர்கள் தன் நிலையை எண்ணி நிலைகுலைந்து போகாமல் இருக்கதான் ஜகாத் மற்றும் தான தர்மங்களை வசதி படைத்தவர்களின் மீது கடமையாக்கி, அவர்களுக்கு நீங்கள் கொடுத்து உதவுங்கள் என்று இறைவன் கூறுகிறான். ஜகாத்தைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்:
தொழுகையை நிலை நாட்டுங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள்; ருகூவு செய்வோருடன் நீங்களும் ருகூவு செய்யுங்கள் (2.43)
எனவே.. மன்னார் அகத்திமுறிப்பை பிறப்பிடமாகவும் புத்தளம் பள்ளிவாசல் துறையை வசிப்பிடமாகவும் கொண்ட மௌலவி யு.மு. மக்பூல் அவர்கள் தற்போது இரு சிறுநீரகங்களும் முற்றாக பாதிப்புற்று இயங்காத நிலையில் மிக கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்
அவர்கள் எமது ஊர் ஜும்ஆ, பள்ளி பள்ளிவாசல் துறை ஜும்ஆ பள்ளி, அட்தலுகம தக்கியா மக்கூனா தக்கியா, பூக்கடை குமாரிமுல்லை ஜும்மா பள்ளி, இக்கிரிகொல்லாவ ஜும்மா பள்ளி. ஆகிய இடங்களில் இமாமாகவும் கதீபாகவும் கடமை செய்து அல்லாஹ் ரஸுல் காட்டிதந்த பாதையில் வாழ்ந்து வந்த மனிதர்.
மேலும் இவருக்கு இரண்டு மாதங்களுக்கு இடையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் இச் சிகிச்சைக்காக ரூ.25 இலட்சம் பணம் தேவை என வைத்தியர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
ஒரு ஆண் மற்றும் ஆறு பெண் பிள்ளைகளுக்கு தந்தையான இவர் சிறு சிறு சம்பளத்தை ஊதியமாக பெற்று வாழ்கை நடத்தியுள்ளார்
எனவே அவருக்காக அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யுமாறும் உங்களால் முடிந்த பண உதவியை செய்யுமாறு மிக தாழ்மையாக வேண்டுகிறோம்.
ஓர் மஸ்ஜிதின் இமாமாக பணியாற்றிய மௌலவி யு.மு.மக்பூல் அவர்களுக்கு இந்த பெருந்தொகை பணத்தை ஈடு செய்ய முடியாதுள்ளது. எனவே நல்லுள்ளம் கொண்ட உங்களின் உதவிகள் இவரின் சிகிச்சைக்காக வேண்டப்படுகிறது.
சிறு துளிகள் சேர்ந்து ஒரு பெரு வெள்ளம் ஆவது போல. நாங்கள் எல்லோரும் சேர்ந்து வழங்கும் சிறிய தொகையிலான உதவிகள் கூட இவரின் மருத்துவ செலவிற்கு ஒரு பெரிய சக்தியாக அமையும். நல்லுள்ளம் கொண்ட பணம் படைத்தவர்கள் தாராளமாக உதவுவதன் மூலம் மௌலவி மக்பூல் அவர்களின் மருத்துவ செலவிற்கான இலக்கை அடைய முடியும்.
எனவே உங்களால் இயன்ற தொகையை இவரின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்ய முன்வாருங்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய இல.
0094766090210
0094715425589
மக்கள் வங்கி
இல. 125200173113847
(குறிப்பு:- சிறுநீரகம் வழங்குபவர்களும் தொடர்புகொள்ளவும்)
Please provide Account Name, Branch and Account in deatisl.
ReplyDeleteJazakallah
அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு சேவையாற்றிய இந்த ஹசறத் அவர்களுக்கு யாரேனும் செல்வந்தர் இவரின் மருத்துவத்திற்கான முழுச்செலவையும் பொறுப்பெடுப்பது மார்கத்திற்கு செய்த சேவையாக இருக்கும்
ReplyDeleteAccount name and branch?
ReplyDeleteAdd the bank branch, bro.
ReplyDelete