Header Ads



றிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...


ஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து  எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆவது சீர்திருத்தம் சத்தமில்லாமல் நிறைவேறும் .


வழமையாக இணையத்தில் செய்தி பார்க்கும் பழக்கமுடையவன் ,ஊடகங்கள் எவ்வாறு நாட்டு நடப்புக்களை மக்களுக்கு அறிவிக்கின்றனர் என்பதை கண்டறிவதற்காக பலவேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒரே நாள் செய்திகளை பார்த்தேன் சிரச TV தொடராக 9 நிமிடங்களுக்கு நாட்டின் கொரோனா தொடர்பில் பெரிய பிம்பம் ஒன்றை உருவாக்கி செய்திகளை சொல்கிறது .20 ஆவது சீர்திருத்தம் தொடர்பில் கடைசி நிமிடங்களில் சில செய்திகள் ,ஹிரு ,தெரன TV களில் தொடராக ரிசாதின் செய்தி ,நாட்டில் ஒரு படு பயங்கரவாதியை தேடுவது போல் செய்திகளை முன்வைக்கும் முறை ...அப்பாடா  இதை எல்லாம் நேரம் ஒதிக்கி பார்க்கும் நாங்கள் கிராமிய வழக்கில் சொன்னால் #சோத்து  #மாடுகள் (சிங்களத்தில் கொங்ஹரக் என்பர் .)


இன்னம் இருக்கு ஹிருவும் தேரனவும் கொரனா தொற்று இடத்தை மினுவாங்கொடை பொக்குற (Miniwangoda cluster ) எனும் போது சிரச பிரண்டிக்ஸ் பொகுர (Brandix cluster ) என்கின்றனர் .இவற்றில் உள்ள சொல் வேறுபாடுகளுக்கு பின்னால் உள்ள அரசியல் புரிபவர்களுக்கு புரியும் .


ஒரு ஊடகம் ரிசாதை பயங்கரவாதியாக காட்ட முயல்கிறது ,இன்னொரு ஊடகம் அவரை வட மாகாண அகதியாக சித்தறிக்கிறது .மொத்தமாக சொன்னால் மொத்த நாட்டு மக்களினதும் எதிர்காலத்துடன் தொடர்புபடும் 20 ஆவது அரசியல் சீர்திருத்தத்தை விட மக்களுக்கு ரிசாதும் ,பிரண்டிக்சும் பேசு பொருளாக மாறியுள்ளது .


சீன அதி உயர் குழு வந்து அடுத்த நாள் அமெரிக்க உயர் குழு வருகிறது .மக்களுக்கு இவை எல்லாம் பிரச்சினை இல்லை ,எல்லாவற்றையும் அரசு இலவசமாக தர வேண்டும் என எதிர்பார்க்கும் சோம்பரிகளாக நாம் இருக்கும் வரை ஹம்பன்தொட்டை என்ன கொழும்பு துறை முகத்தையும் விற்றாலும் எமக்கு பிரச்சினை இல்லை .


தெளிவாக இருங்கள் நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம் ,ஒரு பக்கம் கொடிய நோய் ,அசாதாரன காலநிலை மாற்றம் ,எமது ஏழ்மையை ,கடன் நிலமையை வைத்து எமது நாட்டை சூறையாட துடிக்கும் சர்வேதேச சக்திகள் ,நாம் மக்களாக இதை எதிர் கொள்ள வேண்டும் ஊடகங்களுக்கு முன் இருந்து காலத்தை கடத்த வேண்டாம் ,புதிய செய்திகளை உருவாக்குங்கள் .#இது #எங்கள் #நாடு #இதன் #ஒரு #அங்குலத்தைக் #கூட #விட்டுக் #கொடுக்க #முடியாது.


இந்த ஆபத்தில் இருந்து எம் நாட்டைக் காப்பதற்கு ஒவ்வொரு பிரஜையும் தம் கடமையை செய்ய முன்வர வேண்டும் .

அவர்கள் ஒழிந்து கொள்ளட்டும் அல்லது ஒழித்து வைக்கட்டும் .நாம் தெளிவான வெளிச்சத்தில் விடியலைத் தேடுவோம்.


எம்.என் முஹம்மத்

3 comments:

  1. True. The Media is a BIG Distraction. Each Media group has its own Agenda which, in some respects coincide, like Sinhala Racism, Anti-Muslim Propaganda etc.

    How can the people, at least a sizeable proportion, be educated about the Media Mischief? How easy is it?

    We, Muslims, are the most maligned people in the country now. Should we not do something about it and IMPROVE our Image? Isn't it Important? Should we not make an effort in that Direction? Some may ask how we should make that effort. The Answer is for us to Live Islam as REAL Muslims and NOT as show-case Muslims which we are, unfortunately, now.

    Just a simple example of how we were Respected not so long ago, Before Independence, when the majority community Trusted us so much that they entrusted their cash and valuables to us, our traders, for safe-keeping because they could not go to the Banks due to lack of knowledge in English which was the language in use. Our traders, kept a careful record of the cash and valuables kept with them for safe keeping and returned them to the owners whenever they called for, even after years. What's more, they also added some extra amounts as share of the profits they earned by using the money in their business.

    What is the situation today? Those days, there were a handful of Madrasahs, a few Mowlavis but more Lebbes, few Mosques and even few Qualified people like Doctors, Graduates and Professionals. The Muslims then were ignorantly Religious, but now, we are Religiously Ignorant in spite of the thousands of Mosques, Madrasahs and Mowlavis and tens of thousands of so-called Educated people like Academicians and Professionals in the community.

    Let us make a sincere effort to Live Islam which will immensely help us in this world and, Most Certainly, in the Life to Come.

    ReplyDelete
  2. itha naanka pesi velalla, "rata bera ganda ona" thaan venum

    ReplyDelete
  3. YES BRO..I TOO NOTICED THIS AND WANTED TO WRITE. ALAS..OUR MUSLIMS..

    ReplyDelete

Powered by Blogger.