Header Ads



நஜுமுதீனின் ஆட்டோவை கடத்த முயற்சி - சிங்கள சகோதரர்களின் முயற்சியினால் முறியடிப்பு


28-09-2020 பி.ப ஒரு மணியளவில் முச்சக்கரவண்டி நிறுத்தத்திற்கு வந்த இளைஞனும் யுவதியும்   (நஜுமுதீன் 54) எனும் முச்சக்கர வண்டி ஓட்டுனரிடம் அசோகபுர (சிங்ராஜ)  பகுதிக்கு செல்ல வாடகைக்கு அமர்த்தியுள்ளனர். அங்கு சென்ற இளைஞனும் யுவதியும் அவரை கூரான ஆயுதங்கள் கொண்டு தாக்கியதுடன் மிளகாய் தூளை அடித்து அவரை கீழே தள்ளி விட்டு முச்சக்கர வண்டியை கடத்திக் கொண்டு போகும் போது அப்பகுதி சிங்கள பெண் ஒருவர் விடயத்தை கண்டு மலையடிவாரத்தில் உள்ள கடைக்கு விடயத்தை கைபேசிமூலம் அறிவிக்க, அங்கு ஒன்றுகூடிய சிங்கள சகோதரர்கள் ஹெம்மாதகம பொலிஸாருக்கு விடயத்தை அறிவித்ததோடு முச்சக்கர வண்டியை மடக்கிப் பிடிக்க ஆயத்தமாகியதோடு   பொலிஸாரும் ஸ்தலத்திற்கு வர இலேசாக பிடிபட்டனர். 

கடத்தலில் ஈடுபட்ட இளைஞன் மாவனல்ல உடுமுல்லை பிரதேசத்தையும் யுவதி தனமல்வில பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். விசாரணை தொடர்கிறது.... 

காயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஹெம்மாதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இக் கடத்தலை முறியடிக்க ஹெம்மாதகம பொலிஸ் நிலைய பதில் (OIC) பொறுப்பதிகாரி எதிரிசிங்ஹ அவர்களின் தலைமையில் போக்குவரத்து பொலிஸ் (OIC) பொறுப்பதிகாரி ஹேமன்த , ஜயதிஸ்ஸ மற்றும் சார்ஜன்  (48566)  உதயகுமார, பெண் பொலிஸ் மங்கலிகா (8067) ஆகியோர் கொண்ட குழுவினர் பங்கு கொண்டனர். 


-நியாஸ் ஸாலி

2 comments:

  1. Great unity to stop wrong acts in our country.

    Thanks to all who involved in this course. Those who tried to take the 3 wheeler should be investigated further to find their network and past crimes.

    ReplyDelete
  2. நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் மாத்திரமன்றி ஜனநாயக விழுமியங்களையும் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் அதி முக்கிய கடமையாகும்.

    ReplyDelete

Powered by Blogger.