Header Ads



இலங்கையில் முஸ்லிம்களுக்கே உடற்பருமனும், தொப்பையும் அதிகம் - ஆய்வில் அதிர்ச்சிகர முடிவு


இலங்கையில் அதிகமான உடற்பருமன் கொண்டவர்களாக முஸ்லிம் சமூகம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 


இலங்கையில் நீரிழிவு ஆராய்ச்சி (Diabetics Research) சஞ்சிகை வெளியிட்டுள்ள கட்டுரையொன்றில் இலங்கையின் உடற்பருமன் பரவல் வீதம் (Obesity Prevalence Rate)  58.3 வீதமாகக் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் நகர்ப்புறங்களில் அதிக எடை/உடற்பருமன் அதிகமாக உள்ளது: கொழும்பு நகரப்புற ஆய்வின் கண்டறிதல்கள் எனும் தலைப்பில் நொயெல் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள ஆய்விலேயே இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


அவரது கண்டறிதல்களின்படி 41- 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடையேயே அதிகமான உடற்பருமன் உள்ளவர்கள் காணப்படுவதாகவும் அது 58.3 வீதமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகக் குறைவான 43.1 வீதம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் காணப்படுகிறது.


அறிவு மட்டம், உணவுப் பழக்கங்களை அவதானிப்பதற்கு இந்த வீதத்தில் அடங்குகின்ற பால்நிலை, சமூகப் பின்னணிகளை ஆராய்வது முக்கியமானது எனக் குறிப்பிடும் ஆய்வாளர், அதிக உடற்பருமன் முஸ்லிம் சமூகத்தில் 65.5 வீதமாகவும், சிங்களவர் 52.3 வீதமாகவும், தமிழர் 40.2 வீதமாகவும் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


தொப்பையைப் பொறுத்தவரையில் முஸ்லிம் சமூகத்தில் 74.4 வீதமாகவும், சிங்களவர்களில் 56.8 வீதமாகவும் தமிழர்களில் 44.8 வீதமாகவும் காணப்படுவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 comments:

  1. This news MUST be circulated among the Community's Medical Professionals for their consideration and Advice so that the community may take necessary action and prevent any Health Hazards.

    ReplyDelete
  2. தமிழரின் உணவில் காய்கறிகள் அதிகம். இறைச்சி குறைவு. மீன் அதிகம். முஸ்லிம்களின் உணவில் இறைச்சி அதிகமாகவும் கீரை காய்கனி குறைவாகவும் உள்ளது. மேலும் மைதா மாவு சீனி எண்ணை அதிகம், உடற்பருமனுக்கும் நீரளிவு இதய வருத்த்ங்கள் அதிகரிப்பதற்க்கும் உணவு மட்டும் காரணமல்ல சிறிய ஊர் வட்டங்களுக்குள் தொடற்சியாக திருமணம் செய்து போற உணவு சாராத காரணங்களும் உள்ளன. முஸ்லிம்களின் ஆரோக்கியம் பற்றி விரிவாக விவாதிப்பது அவசியம்.

    ReplyDelete
  3. முஸ்லீம்கள் மத்தியில் வீணான விடயங்களுக்கான செலவுகள் தவிர்க்கப்படுவதால் அந்நிதியானது உணவின் மீது தேவைக்கதிகமாக செலவு செய்யப்படுகிறது.

    ReplyDelete
  4. முஸ்லீம் மக்களின் பாத்ரூமகூடவிடமாட்டீங்கபோல

    ReplyDelete
  5. Well said Jayapalan.
    People eat to survive but Muslim, those has money ( I am not generalising all of them) survive to eat.
    We need to rethink the way we eat.

    ReplyDelete
  6. Thanks Mr. Jayabalan.

    I agree with the points except the last one "local marriage", since it has not be proven by research. I wish more research has to be done regarding the last point as the final messenger of ONE TRUE God who created this universe, also advice us take care of marriage between close blood relatives (even though it is allowed in Islam).

    Hope, Muslims villages and areas will consider this kind of social research for development soon.

    ReplyDelete
  7. முஸ்லிம்கள் என்றல்ல. அனைவருமே தத்தமது உணவு சார்ந்த விடயங்களில் கவனமற்றே உள்ளனர். அதிக மாப்பொருள் சார்ந்த உணவுகளும், அதிக இனிப்பு சார்ந்த உணவுகளுமே நீர் இழிவு, அதிகரித்த நிறை, தொப்பை, இரத்த அழுத்தம்,இருதய நோய்கள் என பல நோய்களுக்கும் காரணமாக உள்ளன. இவற்றிற்கான ஒரே தீர்வாக பேலியோ எனும் உயர் கொழுப்பு உணவுகளை உண்பது மாத்திரமே தீர்வாக இருக்கிறது. ஆச்சரியமாக இருந்தாலும் அதுதான் உண்மை. நான் தற்போது பேலியோ உணவுமுறையை கடைப்பிடித்து ஒரு வாரத்திலேயே 4 கிலோக்கள் வரையான நிறையைக் குறைத்துவிட்டேன். இதன்மூலம் மேற்சொன்ன அத்தனை நோய்களையும் 100% இறைவன் அருளால் கட்டுப்படுத்த முடியும். மேலதிக தகவல்களுக்கு https://www.youtube.com/c/TamilPaleo எனும் ஆரோக்கியம் & நல்வாழ்வு யூடியூப் பக்கம் அல்லது முகப்புத்தகப் பக்கத்திற்கு சென்று அறிந்துகொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்வை மீட்டெடுங்கள்

    ReplyDelete
  8. மாற்று மத சமூகத்தினர் , பசித்தால் மட்டுமே சாப்பிடுகிறார்கள், என்கடவன் முசுபுக்கும் சபிடுரனுங்க, பெருமைக்கும் சபிடுரனுங்க தூங்கறதுக்கு முன்னும் சபிடுரனுங்க தூங்கி முழிச்சாலும் சபிடுரனுங்க, குளிக்க முன்னும் சபிடுரனுங்க, குளிச்சதுகபுரமும் சபிடுரனுங்க, , பிரீண்ட்ச பார்த்தாலும் சபிடுரனுங்க, ப்ரிஎந்ட்ஸோட பெற சொல்லி சபிடுரனுங்க, தீன் னைவிட தீன் ரொம்ப முக்கியம், கல்யாண வீடு என்று வந்துட்டாலே நூறு இருநூறு சவான், புள்ள குத்த வசிட்ட அதுக்கும் சவான் . புள்ள பொறந்துட்ட அதுக்கும் சவான் புள்ளைக்கு கத்னா அதுக்கும் சவான் மைய வீட்டுலயும் சவான் மூணாம் கத்தம் சவான் முப்பதாம் கத்தம் சவான், இப்படி , பக்கத்துக்கு வீட்ட பத்தி நோ கவலை, இது போதாததுக்கு அப்பப்ப கந்தூரி , நோன்பு பெருநாள் , ஹஜ்சுபெருநாள் சாப்பாடு, ஜும்மா ராத்திரிக்கு போனா அங்கயும் பயான் முடிஞ்சு சகான் . எதிர்கால சமூகம் எகேடுகேட்டா எவனுக்கும் கவலையில்ல இதின்னி மாடுகள்..

    ReplyDelete

Powered by Blogger.