Header Ads



அலி சப்ரிக்கு எதிராக, நடந்த சதி - ஜனாதிபதியும், பிரதமரும் முறியடித்தனர்


- Anzir -

தனக்கு அமைச்சுப் கிடைப்பதை தடுப்பதற்கான சதி முயற்சியொன்று நடந்ததாக, நீதி அமைச்சர் அலி சப்ரி Jaffna Muslim இணையத்திற்கு தெரிவித்தார்.


இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில்  3 ஆவது முஸ்லிம், நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அலி சப்ரி இதுபற்றி மேலும் குறிப்பிட்டதாவது,


இன்று புதன்கிழமை, 12 ஆம் திகதி நான் நீதியமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டேன். எனினும் நான் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்ளக் கூடாது என சில சில சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


எனினும் அந்த சதி முறியடிக்கப்பட்டு, நான் நீதி அமைச்சராக பதவியேற்றேன். சதிகளை முறியடிப்பதிலும், எனக்கு நீதி அமைச்சப் பதவி கிடைக்க வேண்டுமென்பதிலும் ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியாக நின்றனர். இதனால் சதி முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.


முன்னாள் அமைச்சர் அதாவுல்லாக்கு, ஏன் அமைச்சுப் பதவிகள் கிடைக்கவில்லை என்பது எனக்குத் தெரியாது.


எனது கடமையை, எமது தேசத்திற்கு நான் உரியமுறையில் செய்வேன். ஆட்சியாளர்களுக்கு நான் முழு விசுவாசமாகவும், கட்சிக்கு என்னால் முடிந்த அர்ப்பணிப்பையும் செய்துள்ளேன். ஆதனால் எனக்கு இந்த அமைச்சுப் பதவி கிடைத்தது இதனை முழு நாட்டுக்கும் கௌரவமாக கருதுகிறேன் எனவும் புதிதான நியமிக்கப்பட்டுள்ள அலி சப்ரி மேலும் குறிப்பிட்டார்.

10 comments:

  1. Congratulations...and be an example...

    ReplyDelete
  2. நம்ம கைய வெச்சி நம்ம கண்ணையே குத்த போகுது மஹிந்த & கோ..
    Wait and watch

    ReplyDelete
  3. congratulation Hon. Mr. Ali Sabry
    (Mohamed Naleem from Suadi Arabia)

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள். ஜனாஸா எரிப்பில் உங்கள் நீதி என்ன என்பதை அறியத்தான் முஸ்லிம்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

    ReplyDelete
  5. All the best! Keep up the good work.

    ReplyDelete
  6. MAY ALLAH GIVE U THE BEST OF HEALTH
    & LONG LIFE.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ஐயா. எதனையும் பங்கு வைக்கும் போது பெரும்பான்மைத் தலைமைகள் சண்டைபிடித்து பெற்றுக்கொண்டமையால் சிறுபான்மையினருக்கு உரியவையும் கிடைக்காமல் போன போதுதான் சிறுபான்மை மக்களிடையே கட்சிகளும், தனித்தலைமைகளும், இயக்கங்களும் தோற்றம் பெற்றன என்பதனை இச்செய்தி உறுதிப்படுத்துகின்றது. நீங்கள் ஒருமுற்போக்குவாதி என்பதுடன் பலம் பொருந்திய அரசாங்கமும் அமைந்தமையினால் சனாதிபதியும் பிரதமரும் தங்களுக்கு உதவ முடிந்தது. இல்லை என்றால்? இருந்த போதும் போராடப்புறப்பட்ட சிறுபான்மைத்தலைமைகள் தமக்கு மக்கள் வழங்கிய சக்தியைக் கொண்டு தமது இனப் பங்குக்கு மேலதிகமாக அனுபவிக்கத் தொடங்கியதும் தான் இன்றைய நிலைமை ஏற்படக்காரணம்.ஒரு முறை எனது இடதுசாரி நண்பர் ஒருவருடன் நட்பின் நிமிர்த்தம் அமைச்சர் இந்திக குணவர்தன அவர்களைச் சந்திக்கக் கிடைத்தது. அதன் போது இடம்பெற்ற ஒரு உரையாடல் இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கின்றது. உரையாடல் இதோ " எனது நண்பர் அமைச்சரிடம் ஒரு இளைஞருக்கு தொழில் வாய்பொன்றினைப் பெற்றுத்தருமாறு கோரினார் அதற்கு அமைச்சர் அது கடினமான விடயம் என்று கூற அஸ்ரப் அவர்களால் முடியுமென்றால் ஏன் தங்களால் முடியாது என்று எனது நண்பர் கேட்டார். அதற்கு அமைச்சர் சொன்னார் அஸ்ரப் போன்று எங்களால் blackmail செய்ய முடியாது. அது தொடரப்போவதுமில்லை சிங்கள மக்களும், சிங்களத்தலைவர்களும், பௌத்த மதகுருமார்களும் விழித்துக்கொண்டால் நிலைமை தலைகீழாக மாறிவிடும்" அது தான் இன்று நடந்திருப்பது போன்று தோன்றுகிறது.

    ReplyDelete
  8. this guy is just going to be a puppet at the hands of Rajapakses

    It is a shrewd trump like act . I dont know why big celebration and tom tom

    wait and see what is going to happen and you would be suprised

    ReplyDelete
  9. this guy is just going to be a puppet at the hands of Rajapakses

    It is a shrewd trump like act . I dont know why big celebration and tom tom

    wait and see what is going to happen and you would be suprised

    ReplyDelete

Powered by Blogger.