Header Ads



MF றிபானா கொரோனாவால் மரணித்தாரா...? சந்தேகம் வெளியிடும் கணவர்

 

- ஏ.ஏ.எம். அன்ஸிர் -


கொரோனா தொற்று ஏற்பட்டுளளதாக கூறி, கடந்த 23.08.2020 அன்று தகனம் செய்யப்பட்ட எம்.எப். றிபானா குறித்து, முதற் தடவையாக அவரது கணவர் ஈஸான் ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் முக்கிய சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.


அதனை வாசகர்களுக்கு, இங்கு அப்படியே தருகிறோம்.


எனது மனைவிக்கு புற்றுநோய் இருந்தது. 2018 மார்ச் மாதம் அதனை கண்டறிந்தோம்.  இலங்கையில் சிகிச்சை மேற்கொண்ட போதும், மேலதிக சிகிச்சைக்காக இந்தியாவுக்கு சென்றிருந்தோம். அங்கு சிகிச்சையும் வழங்கப்பட்டது.


நாட்டிலும், உலகிலும் ஏற்பட்ட கொரோனா தொற்று அச்சுறுத்தலினால் நாம் இந்தியாவிலே தங்கிநின்று தொடர் சிகிச்சைப் பெற்றோம். புற்றுநோயும் குணமாகியிருந்தது. இந்திய வைத்தியர்களின் பூரண சம்மதத்துடன், அவர்களின் சிறப்பு கடிதத்தை தூதரகத்தில் கையளித்து உரிய முறைகளினூடாக, சட்ட அனுமதியுடன் 20-08-2020 அன்று இலங்கை வந்தடைந்தோம்.


இந்தியாவிலிருந்து இலங்கை வரும்போது எனது மணைவிக்கோ, அல்லது அவரின் கணவரான எனக்கோ கொரோனா தொற்றோ அல்லது அதற்கான அறிகுறிகளோ இல்லை.


நாம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததும், எமக்கு கொரோனா தொற்றுள்ளதா, என பரிசோதித்தார்கள். பின் நீர்கொழும்பு டொல்பின் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டோம்.


எனது மனைவி றிபானா, களைப்பினால் தூங்கி விட்டார். எனக்கு அப்போது தொலைபேசி அழைப்பு வந்தது. அதாவது எனது மனைவிக்கு கொரோனா தொற்றியுள்ளதாகவும், உடனடியாக அவரை மாறவில தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்ப வேண்டுமெனவும் வற்புறுத்தினர்.


கணவராகிய நானும் மனைவியுடன் வருகிறேன் என அடம்பிடித்தேன். எனக்கு கொரோனா பொசிட்டிவ் இல்லாத படியால், சுகாதார அதிகாரிகள் என்னை மனைவியுடன் செல்ல அனுமதிக்கவில்லை.


இதனை எப்படி மனைவியிடன் கூறுவது எனத் தயங்கினேன். யோசித்தேன், பின்னர் ஒருவாறு மனைவியை எழும்பச்செய்து உங்களுக்கு இன்னுமொரு கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டுமாம். ஆகவே கொஞ்சம் போய் வாருங்கள் என பாசத்துடன் கூறினேன். இதைக் கேட்டதும் மனைவி,, யா அல்லாஹ் எனக்கூறி அழத் தொடங்கிவிட்டார். 


அவரைக் கட்டுப்படுத்துவது சிரமமாகிவிட்டது. ஒரு மாதிரியாக அவரை மாறவிலக்கு அனுப்பி வைத்தோம்.


பின்னர் அங்கிருந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.


என்னைப் பிரிந்த வேதனை, கொரோனா  பற்றிய அச்சத்தினாலும் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர், மிகுந்த வேதனையில் இருந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்றுள்ளது என நம்பப்பட்டதால் உரியமுறையில் அவரை அணுகுவதிலும் தவறு இழைக்கப்பட்டுள்ளது.


இவ்வாறான நிலையிலேயே அவர் 22.08.2020 அன்று இரவு 11 50 க்கு மரணமடைந்துள்ளார்.


தனக்கு கொரோன உண்டென, வைத்தியர்கள் கூறியதுடன், அவர் கதறி அழுதுள்ளார். பயத்தினால் வேதனைப்பட்டுள்ளார். அந்த நிலையில் அவரை 2 தடவைகள் மாரடைப்பு தாக்கியுள்ளது.


மரணச் செய்தி எங்களுக்கு அறிவிக்கப்பட்டதும், நாங்கள் வைத்தியசாலை விரைந்தோம். அவருக்கு பிரேத பரிசோதனை செய்யும்படி வலியுறுத்திளோம். எனினும் அதற்கு வைத்திய அதிகாரிகளோ, சுகாதாரப் பிரிவினரோ இணக்கம் தெரிவிக்காது மறுப்புத் தெரிவித்தனர்.


கொரோளாவினால் உயிரிழந்த ஒருவருக்கு, பிரேத பரிசோதனை செய்வது, தமக்கும் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு என்று அவர்கள் கதை கூறினார்கள்.


அப்படியென்றால், எனது மனைவியின் ஜனாஸாவை எரித்தபின் சாம்பலை எடுத்து, அதனை பரிசோதிப்போம் என்றார்கள். இது மையத்துக்கு செய்யும் அதாபாக அமையுமென நம்பி, நாங்கள் சாம்பலை பரிசோதிப்பதற்கு மறுப்புத் தெரிவித்தோம்.


வேறு வழியின்றி ஜனாஸாவை, எரிக்க ஒப்புக் கொண்டோம். 


எனினும், எனது மணைவியின் மரணச் சான்றிதழில், கொவிட் 19 இனால் ஏற்பட்ட மரணம் என்றே எழுதப்பட்டுள்ளது.

இருந்தபோதும் எனது மனைவி றிபானாவின் மரணத்தில், எமக்கு சந்தேகம் உள்ளது. 


இந்நதியா - வேலூரில் இருந்து வரும்போதும் எனக்கோ, எனது மனைவிக்கோ கொரோனா தொற்று இருக்கவில்லை.


கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடத்திய, பரிசோதனை குறித்து எமக்கு நம்பிக்கையில்லை. 


எனது மனைவிக்கு கொரோன தொற்று இருந்திருந்தால் எனக்கும் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும். எனது கைகளினாலே மனைவிக்கு சாப்பாடு ஊட்டிவிட்டேன். ஒன்றாக பயணித்தோம். ஒன்றாக உறங்கிறோம். இன்று 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை இதுவரை எனக்கு கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை.


இப்படியிருக்கையில், எனது மனைவிக்கு மாத்திரம் எப்படி கொரோனா வந்தது...?


எதிவரும் 31 ஆம் திகதி நான் தனிமைப்படுத்தபட்டுள்ளேன். அதற்குள் எனக்கு கொரோனா பொசிட்டிவ் வராவிட்டால், 100 சதவீதம் எனது மனைவிக்கும் கொரோன இல்லை, அவரது ஜனாஸா திட்டமிட்டவகையில் எரியூட்டபட்டுள்ளது என்ற தீர்மானத்திற்கே நாம் வருவோம்.


மனைவியின் ஜனாஸாவை பார்க்க, எங்களை அனுமதித்தார்கள். ஜனாஸா தொழுகையிலும் 60 பேர்வரை பங்கேற்றோம்.


எமக்கு பல உதவிகளை, இலங்கை இராணுவத்தினர் செய்தார்கள். அவர்களுக்கு நன்றி கூறுகிறோம்.


எனது மனைவி மிகவும் பாசமானவர். பிள்ளைகளுடன் அன்பானவர். 4 பிள்ளைககள் உண்டு. அவர்கள் வயதில் சிறியவர்கள். இந்தியாவில் சிகிச்சைக்காக 9 மாதம் தங்கிவிட்டு இலங்கை வந்தது பிள்ளைகளையும், உறவுகளையும் பார்ப்பதற்காகவே எனவும் எம்.எப். றிபானாவின் கணவர், ஈஸான் ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் தமது சோகங்களை உருக்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.


றிபானாவின் மறுமை நல் வாழ்வுக்காகவும், உயர்தரமான சுவனம் கிடைக்கவும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.


யா அல்லாஹ்  றிபானாவின் பாவங்களை மன்னித்து, அவருக்கு மேலான சுவனத்தை வழங்கிடு. அவரது இழப்பினால் வேதனைப்படும் அவரது பிள்ளைகளுக்கு அறுதலை கொடுத்திடு. அவரது கணவருக்கும், குடும்பத்தினருக்கும் மன தைரியத்தை கொடுத்திடு....!

16 comments:

  1. Aameen aameen Ya Rabbal Aalameen

    ReplyDelete
  2. Aameen Aameen YaRabbal AAlameen. Very Very Sad situation YaRabb.

    ReplyDelete
  3. Brother you should expose these after you come out of quarantine or else they would make you also a victim of corona citing your wife.
    May allah protect all of us.

    ReplyDelete
  4. sahodererhale innum naangal porymeya irundaal .innum engalukku aneedi etpadum.awaseremahe idukku edawedu mudiwu edukke wendum.adatku engaludaye samuham otrumeyay kadaypidikke wendum.

    ReplyDelete
  5. May Allah grant here 'Jannathul Firthous'. May her family be patient with her lose. Aameen!

    ReplyDelete
  6. கவலைப்பட வேண்டாம் சகோதரரே. இந்த விடயத்தில் யார் யார் எல்லாம் வேண்டும் என்றே தவறு இழைத்தார்களேப அவரகளுக்கு நம் முன்னே அல்லாஹ் தண்டனையினை வழங்குவான்.

    ReplyDelete
  7. May be its written on her Jannathul Firdous....May Allah bless her...

    ReplyDelete
  8. May Allah grant her Jonatul firdous and give eatiful saber ( patience) to their family. Unjstice will delt by Allah. Just leave to Allah.

    ReplyDelete
  9. அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான். இந்த இனவெறியர்கள் அழிந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை

    ReplyDelete
  10. கவலை சகோதரா உங்கள் மனைவியின் ஆத்மா சாந்தியடையட்டும் ஒம் சாந்தி சாந்தி

    ReplyDelete
  11. May Allah forive all her sins and peovide her jannathul fiedouz.

    ReplyDelete
  12. பொறுமையோடு இருங்கள் அல்லாஹ் போதுமா ன வ ன்

    ReplyDelete
  13. This is another kind of harassment to suffer mentally then to get heart attack.One African country tested the machines imported from China to non human/animal for corona virus but the results showed positive. So this shows the machines are not 100% reliable.
    May Allaah grand this lady Jennathul firdouse.

    ReplyDelete

Powered by Blogger.