Header Ads



வஹாப்வாதிகளின் கீழ் தங்கியிருக்கும் அரசில் பங்காளிகளாக இருக்க மாட்டோம் - விமல், கம்மன்பில கூட்டாக அறிவிப்பு


வஹாப்வாத அடிப்படைவாதிகளின் கீழ் தங்கியிருக்கும் அரசாங்கமொன்றில் ஒருபோதும் பங்காளராகப் போவதில்லை என அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உருமயவும் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பில் ஐந்து அம்ச உடன்படிக்கையொன்றில் இரு கட்சிகளும் கைச்சாத்திட்டுள்ளன. 

இரு தலைவர்களும் இதில் கையொப்பமிட்டார்கள். இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவங்ச, 

இந்தப் பொதுத்தேர்தல் சரித்திரபூர்வமான கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடையதாகும். வாக்களித்த 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்ட பாராளுமன்றத்தை உருவாக்கும் தேர்தலாக இத்தேர்தல் அமைய வேண்டும். 

வஹாபி அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலால் நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. நாட்டின் தேசிய பொருளாதாரம் அந்நிய ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்ததால் அதனை தடுக்க வேண்டிய தேவையும் இருந்தது. இந்நாட்டின் தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம் மாத்திரமல்ல அவ் எல்லாப் பக்கங்களிலும் உருவான அழுத்தங்களால் ஏற்பட்ட சீர்திருத்தங்களால் அரசுக்கு முடிவெடிக்க முடியாமையை நிறுத்தி அரசுக்கு அதிகாரம் வழங்குவதுதான் 69 இலட்ச மக்களின் பொதுவான நோக்கமாகக் காணப்பட்டது. 

இவை அனைத்தும் ஜனாதிபதியால் நிறைவேற்றப்பட எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அர்ப்பணிப்புடனும் அது தொடர்பான நம்பிக்கையுடன் செயல்படக்கூடிய பொதுமக்களின் பிரதிநிதிகளால் இப்பராளுமன்றம் முழுமையடைய வேண்டும் என்றார். 

உதய கம்மன்பில கூறியதாவது: இந்நாட்டு மக்கள் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை எதிர்பார்க்கின்றார்கள். முஸ்லிம் பெண்கள் கூட தங்களின் திருமணத்தின் போது தங்களின் விருப்பம் பெறப்பட வேண்டும் என இன்று கூற முன்வந்துள்ளார்கள். ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அமைச்சுப் பதவியை வகிக்கும் வரை உண்மை வெளிவரவில்லை .

அவர்கள் இல்லாத அரசாங்கத்தின் முன்னால் பயமின்றி அரச சேவையாளர்களும் ஏனையோரும் தாங்கள் அறிந் தகவல்களை தெரிவிப்பதன் மூலம் தெளிவாகின்றது.   எதிர்காலத்தில் உருவாகும் எமது அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பலம்பெற சில ஆசனங்கள் குறைவாக இருந்தாலும் ரிஷாத் பதியுத்தீன் போன்றோர் அவ் அரசாங்கத்தில் உள்வாங்கப்பட நாம் இடமளிக்கமாட்டோம் என்ற நம்பிக்கை இந்நாட்டு மக்களிடையே உள்ளது என்றார். 

5 comments:

  1. இவர்கள் வேற்றுக் கிரகவாசிகளோ? எல்லாவற்றையும் மாற்றி மாற்றி சொல்றாங்களே?

    ReplyDelete
  2. இன்னமும் நீங்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவே வரவில்லை. முதலில் பாஉ க்களாக வர முயற்சி செய்யுங்கள். அதன்பின்னர் உங்கள் எண்ணம் நிறைவேறுகின்றதா என்று பார்ப்போம்.

    ReplyDelete
  3. இவர்களின் எதிர்பார்ப்பு துவேஷத்தை வளர்த்து சிங்கள வாக்குகள் மட்டும் பெறுவதாகும்!

    ReplyDelete
  4. இந்த இரண்டு சக்கிலி நாய்களுக்கும் முஸ்லிம் வாக்குகள் ஒன்றாவது வழங்குவது மிகப் பெரிய தவறு என்பதை சமூகத்தில் ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

    ReplyDelete
  5. itha vittaa vera etha vechida polakka poreenga sori naayngala..!

    ReplyDelete

Powered by Blogger.