கிழக்கு தொல்பொருள் மரபுரிமை செயலணியில், தமிழ்பேசும் மக்களும் தமது கருத்துக்களை பகிர வாய்ப்பளிக்க வேண்டும்
கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்காக அமைக்கப்பட்ட செயலணிக்குழுவின் முகாமைத்துவ நடவடிக்கைகளின் போது கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்குமான பொறிமுறை ஒன்றை உருவாக்கவேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் ரீதியிலான பெறுமதிவாய்ந்த இடங்களை அடையாளம் காண்பதற்கும், அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்களை முகாமைத்துவம் செய்வதற்கு பொருத்தமான நடைமுறையை இனங்கண்டு செயற்படுத்துவதற்கும், ஜனாதிபதியினால் செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அண்மையில் வர்த்தமானி அறிவித்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த செயலணியின் நடவடிக்கைகளின் போது கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பளிக் வேண்டும் கோரிக்கை விடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Post a Comment